(Video) கல்குடாவிலே எமது தலைமைகளை உருவாக்க வேண்டும் ; மு.கா. உயர் பீட உறுப்பினர் றியால் ஆவேச பேச்சு

0
120

01(அஹமட் இர்ஷாட்)

எமக்கு தற்பொழுது கல்குடா மத்திய குழு உறுப்பினர்களிடம் மட்டுமே உரையாற்றுகின்ற வாய்ப்பு கிடைக்கின்றது. ஆனால் ஒரு சபையில் இருந்து கொண்டு சில விடயங்களை சமூகத்திற்கு கூற வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது. இந்த தூய குடி நீர் வழங்கும் நிகழ்ச்சியானது பல இழுபறிகளுக்கு மத்தியில் இறுதியில் முடிவெடுக்கப்பட்டு கூட்டப்பட்ட நிகழ்வென்பதினாலும் நாம் எதிர்பார்த்த சில பிரமுகர்களின் வருகை அமையாமல் போய்விட்டது.

இருந்தாலும் சொல்ல வேண்டிய விடயங்களை கூறியாகவே வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றேன். அந்த வகையிலே எமது ஊர் என்ற வகையிலும் கல்குடா பிரதேசம் என்ற ரீதியிலும் எமது பிரதேசத்தில் இருந்து தலைமையினை உறுவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கிருக்கின்றது என கணக்கறிஞர் றியால் கடந்த முதலாம் திகதி ஓட்டமாவடி பிரதான வீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட தூய குடி நீர் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கணக்கரிஞர் றியால் உறையாற்றுகையில்,

அந்த வகையிலே வேறு ஊர் தலைவர்களை நிராகரிக்க வேண்டும் என நான் கூறவில்லை. எமது ஊரானது தலைமைத்துவங்களை உருவாக்க தகமை அற்ற பிரதேசமாக இருந்து விடக் கூடாது என்பதே எனது கருத்தாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

எமது பிரதேசமும் தலைவர்களை உருவாக்க கூடியதும் தேசிய ரீதியில் சேவை செய்யக்கூடிய, சர்வதேச ரீதியில் தொடர்புகளை ஏற்படுத்த கூடியதும், அதன் மூலம் பிரதி பலன்களை பெறக்கூடியதுமான ஊராக எமது ஊர் மாற்றமடைய வேண்டும்.

இதன் அர்த்தம் மற்றைய ஊர்களின் தலைவர்களை நாம் நிராகரிக்க வேண்டும் என்பதல்ல. இந்த குடி நீர் வழங்கும் நிகழ்ச்சி கூட மிகவும் இக்கட்டான நிலையிலும் இழுபறிக்கு மத்தியிலும் நடாத்தப்படுவதாக அறியக்கிடைத்தது. அதில் நான் தான் தலைவராக வர வேண்டும், றியாலினைதான் நீங்கள் பிரதம அதீதியாக அழைக்க வேண்டும் என்பது கிடையாது. என்னை விடவும் தகுதியானவர்கள் எமது சபையிலே இருக்கின்றார்கள். சபைக்கு வராமல் வெளியிலும் இருக்கின்றார்கள்.

தலைவர்களை நாம் உள்வாங்கி அவர்களை வளர்த்து எமது பிரதேசமும் தலைவர்களை தேசியத்திற்கு பெற்றுக்கொடுக்க கூடிய பிரதேசமாக மாற்ற வேண்டும்.

என்னை ஏதவாது நிகழ்ச்சிக்கு அழைக்காவிட்டால் எமதூரிலிருந்து இன்னொரு தலைவனை அடையாளபடுத்தி அழைத்து அவரை நீங்கள் வளர்த்து விட வேண்டும் என இந்த பொதுக்கூட்டத்தில் கேட்டுக்கொள்ள விரும்புக்கின்றேன் என்ற விடயத்தினை உயர் பீட உறுப்பினர் சுட்டிக்காட்டியமையானது வெளியூர்களில் இருந்து வந்து கல்குடா பிரதேசத்தில் அரசியல் செய்ய நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு மறை முகமாக கொடுக்கப்பட்ட சாட்டை அடியாக கருத முடிகின்றது.

இந்த மட்டக்களைப்பு மாவட்டத்திலே முஸ்லிம்கள் 26 வீதமாக இருக்கின்றோம். ஆனால் நமக்கு இருக்கின்ற காணியோ 1.3 வீதமாகும். இது ஏன் தேசிய ரீதியில் பேசப்படுவதில்லை? நாம் நெருங்கி நெருங்கி வாழ்ந்து எமது தலைமுறையினரை இன்னும் சில ஆண்டுகளுக்கு பின்னர் தீவிரவாதிகளாக மாற்றுவதற்கு நாம் போடுகின்ற அடித்தளமா?

ஆகவே நாம் அனைவரும் மிகவும் கவனமாக இருந்து தமிழ் தரப்பு எவ்வாறு பிரிந்து இராஜ தந்திரமாக ஒரு தரப்பு தமிழ் எழுச்சியினை கொண்டாடும் அதே நேரத்தில் மற்றைய தரப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்தையினை மேற்கொண்டு வருகின்றமையினை போல் எமது தலைமைகளும், நாம் உருவாக்க தலைமைகளும் இராஜதந்திரத்தினை கடைபிடிக்க வேண்டும் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அத்தோடு பெரும் தலைவரை இழந்த சோகத்தில் இன்னும் நாம் இருப்பதினால் அவரினை ஞாபகப்படுத்தி அவருடைய கப்ரினை அல்லாஹ் ஒளிமயமாக்கி கொடுக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றேன் எனக்கூஉறி தனதுரையினை முடித்தார்.

LEAVE A REPLY