தொலைந்துபோன Android/Iphone IMEI நம்பரை கண்டறிவது எப்படி.?

0
247

நமது ஸ்மார்ட்போன் நம் சிறியதொரு கவனக்குறைவால் தொலைந்து போய்விட்டாலோ அல்லது திருடப்பட்டு விட்டாலோ அதை மீட்க தேவையான முக்கியமான ஒரு விடயமாக நமது ஆண்ட்ராய்டு / ஐபோனின் ஐஎம்இஐ நம்பர் திகழ்கிறது. சரி, தொலைந்துபோன போனின் ஐஎம்இஐ நம்பரை கண்டறிவது எப்படி.?

வழிமுறை #01

உங்களை நம்பரை பெற எளிதான ஒரு வழி இதுவாகும். நீங்கள் உங்கள் மொபைல் பேக்கேஜிங் செய்யப்பட்ட பெட்டியில் சர்வதேச மொபைல் சாதன அடையாளமான 15 எண்களை கொண்ட ஐஎம்இஐ எண்ணை கண்டுபிடிக்க முடியும். ஆனால் அதற்கு நீங்கள் அந்த பெட்டியை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

வழிமுறை #02

மின் விலைப்பட்டியல் மற்றும் அந்த நகலை மின்னஞ்சல் மூலமும் அனுப்பி வைக்கின்றன. எனவே, விலைப்பட்டியலில் இருந்து உங்கள் ஐஎம்இஐ நம்பரை கண்டுபிடிக்க முடியும்.

வழிமுறை #03

30-1475222957-x30-1475215726-method1-finditinyourdevicespackagingbox-jpg-pagespeed-ic-cmln8eegtjஉங்களை ஐஎம்இஐ எண்ணை கூகுள் டாஷ்போர்ட்டில் கண்டறியலாம். மொபைல் போன் காணாமல் போன திருடுபோன சம்பவங்களில் கூகுள் டாஷ்போர்ட் ஆனது ஒரு ஆபத்பாண்டவன் போல செயல்படும். ஆண்ட்ராய்டு பயனாளிகள் தங்களது கூகுள் அக்கவுண்ட் சைன்-இன் செய்து கூகுள் டாஷ்போர்ட் அக்சஸ் பெறவும்.

தகவல் : அது கூகுள் அக்கவுண்ட்டில் இணைக்கப்பட்ட அனைத்துச் சாதனங்களின் தகவல்களையும் சேமிக்கிறது. அங்கு நீங்கள் எளிதாக உங்கள் மொபைல் ஐஎம்இஐ எண்ணை கண்டுபிடிக்க முடியும்.

ஐபோன் பயனர்கள் : மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து செயல்முறைகளையும் ஐபோன் பயனர்கள் செயல்படுத்தலாம் உடன் தங்கள் ஐடியூன்ஸ் அக்கவுன்ட்டை அணுக முடியும், பின்னர் ப்ரபரன்ஸ் சென்று அங்கு டிவைஸ் பொத்தானை கிளிக் செய்யவும். அடுத்து, சம்மரி டாப் சென்று உங்கள் தொலைபேசி நம்பரை இருமுறை கிளிக் செய்யவும். உங்கள் ஐஎம்இஐ தெரிய வரும்.

LEAVE A REPLY