அணையில் பஸ் விழுந்து 10 பேர் பலி

0
171

இந்தியாவில்  மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து லதேரி நகருக்கு சென்ற பஸ்சில் 30 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துகொண்டிருந்தனர். பாலி கிராமத்திற்கு அருகே அணையை ஒட்டியுள்ள பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அணையில் தவறி விழுந்தது. இதில் 3பெண்கள் , 3குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகினர் .மேலும் 17 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பஸ் 80 அடி ஆழத்தில் விழுந்ததால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தெரிகிறது. முதற்கட்ட விசாரணையில் டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

-Malai Malar-

LEAVE A REPLY