துறைமுக அதிகார சபையில் வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு

0
135

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

வரலாற்றில் முதற்தடவையாக துறைமுக அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறுவர்தின நிகழ்வு ஒக்டோபர் 1ஆம் திகதி துறைமுக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

துறைமுக பிரதியமைச்சர் நிஷாந்த முத்து ஹெட்டிகம மற்றும், தலைவர் தம்பிக ரணதுங்கவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச் சிறுவர் தின நிகழ்வில், முகாமைத்துவப் பணிப்பாளர், பிரத்தியேக முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் உயரதிகாரிகள், துறைமுக ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

துறைமுக ஊழியர்களின் சிறார்களுக்காக நடத்தப்பட்ட இந்நிகழ்வில், சிறார்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர். அதில் சிறப்பாக தமது திறமைகளை வெளிக்காட்டிய சிறார்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

விளையாட்டுக்களில் சிறுவர்கள் தங்களது திறமையைக் காட்ட ஆயத்தமாவதையும் கலந்து கொண்ட பெற்றோர்கள் சிறுவர்களை உற்சாகமூட்டுவதையும் படங்களில் காணலாம்.

LEAVE A REPLY