மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களால் மீண்டும் உரிமைகளைப் பெற்றுத்தர முடியுமா-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன்

0
190

இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தில் நம் நாட்டின் அடிப்படைப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பல்வேறு முஸ்தீபுகள் நடைபெற்று வரும் வேளையில் முஸ்லிம்கள் எல்லோரும் சமூகம் என்ற ரீதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் தெரிவித்தார்.

கடந்த 01.10.2016 சனிக்கிழமை காங்கேனோடையில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் 85 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் அங்குரார்ப்பண வைபவத்திலே முபீன் தெரிவித்தார்.

முபீன் மேலும் தெரிவிக்கையில் நாட்டில் காணப்பட்ட யுத்த நிலமைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அரசியலமைப்பு மாற்றம் நடைபெற இருக்கும் இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் தங்களுக்குரிய அரசியல் ரிதியான உரிமைகளை அரசியல் அதிகாரமே முக்கியமானதாகும். இன்று மத்தியிலும் மாகாணத்திலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பலம் பொருந்திய நிலையிலுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமிடம் பொறுப்பாகவுள்ள நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினால் நாட்டின் எல்லா பிரதேசங்களிலும் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதாரப் பிரதியமைச்சர் பைஸல் காசிம்,விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் ஹரீஸ் கிழக்கு மாகாண முதலமைச்சு மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு ஆகியவைகளினாலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதே வேளையில் நாட்டின் இனப்பிரச்சினை தீர்வு முயற்சியிலும் சிறுபாண்மை மக்களின் உரிமையை உறுதிப்படத்திக் கொள்வதிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் பாரிய பங்களிப்பை வழங்கி வருகிறார். அவர் எப்போதுமே பெரும்பாண்மை மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கும் சக்திகளுக்கு மத்தியில் காத்திரமாக பணியாற்றி வருகின்றார்.

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சிறுபாண்மை மற்றும் சிறிய கட்சிகளின் கருத்தை திரட்டி ஒருமுகப்படுத்தும் பொறுப்புக்கும் ஹக்கீமே பொறுப்பாகவுள்ளார். அபிவிருத்தியையும் உரிமையையும் ஒருங்கே பெற்றுக் கொள்ள நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பின்னால் அணி திரள வேண்டியது அவசியமாகும்.

முன்னைய மஹிந்த ராஜபக்ஸவின் அராஜக அரசாங்கம் முஸ்லிம் காங்கிரஸை கூறுபோட்டு கட்சியை உடைக்க முயன்றது.பலரை கட்சியிலிருந்த பிரித்தெடுத்து அமைச்சுப் பதவிகளை வழங்கி முஸ்லிம் காங்கிரஸை முடக்க முயன்றது. முஸ்லிம் காங்கிரஸை ஒடுக்கி முஸ்லிம்களை புறக்கனித்ததோடு பல அநியாயங்களையும் கட்டவிழ்த்து விட்டது. இன்று நேர்மையான நல்லாட்சி அரசாங்கம் உருவாகியதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸிற்குரிய அந்தஸ்தும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

இன்று தேசியப்பட்டியல் கிடைக்காதவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் தமக்கான அதிகாரத்தை எப்படியாவது பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்து முஸ்லிம் காங்கிர ஸிற்கெதிராக பல்வேறு விமர்சனங்களைச் செய்கின்றனர். சுதந்திர கிழக்கு என்று சொல்லி அரசியல் சூதாட்டம் ஆடிக்கொண்டிருக்கம் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் உள்ளுராட்சி அமைச்சராகவிருந்த போதுதான் உள்ளுராட்சி அமைச்சராகவிருந்த போதுதான் உள்ளுரராட்சி வட்டார எல்லைகள் சிறுபாண்மை சமூகத்தை மிகவும் மோசமாக பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டன.

இன்று பல்வேறு முஸ்லிம் பிரதேசங்களில் வட்டார பிரிப்பு எல்லையில் தமக்கு அநீதி நடந்துள்ளதாக இன்று முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர் அனுப்புகின்றனர். குறிப்பாக அக்குறணை சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு நடந்த அநீதியினை வட்டார எல்லைப் பிரிப்பு ஆணைக்குழுவின் தலைவரே சுட்டிக்காட்டியுள்ளார்.

வெறுமனே ராஜபக்ஸாக்களை திருப்திப்படுத்த முஸ்லிம் உரிமைகளை சிதைத்தவர்கள் இன்று சுதந்திரக் கிழக்கு என்று கூப்பாட போடுகின்றார். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களால் உருவாக்க முயற்சிக்கப்படும் முஸ்லிம் கூட்டமைப்பினால் எப்படி முஸ்லிம் உரிமைகளை பெற்றுத்தர முடியுமென முபீன் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY