சீனாவில் கனமழை 13 பேர் பலி

0
138

சீனாவில் உருவான சூறவாளி யுன்னான், புஜியான், ஜியாங்ஸி ஆகிய மாகாணங்களை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன. தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 29 பேரின் கதி என்னவானது என்பது தெரியவில்லை. விளைநிலங்கள், முக்கிய சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டிருப்பதால் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை 6 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 3 மாகாணங்களிலும் சுமார் 20 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படு கிறது. இதைத் தொடர்ந்து போர் கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன.

-The Hindu-

LEAVE A REPLY