மெக்சிகோவில் கொலிமா எரிமலை வெடித்து சிதறியது: 350 பேர் வெளியேற்றம்

0
127

மெக்சிகோவில் ஜலிஸ்கோ மாகாணத்தில் கொலிமா எரிமலை உள்ளது. அந்த எரிமலை தற்போது வெடித்தது. அதனால் அங்கிருந்து கடும்புகையும், சாம்பலும் வெளியேறி காற்றில் கலக்கிறது.

எரிமலை வெடித்ததை தொடர்ந்து அந்த மலையின் அடிவாரத்தில் உள்ள லா யெர்பாபுனே மற்றும் லா பெக்கரேரா ஆகிய கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் 350 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மேலும் பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த 1913-ம் ஆண்டில் இந்த எரிமலை முதன் முறை யாக பெரிய அளவில் வெடித்து அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

-Malai Malar-

LEAVE A REPLY