புதிய வசதியுடன் ஐபோன்களுக்கான ஸ்கைப் விரைவில்

0
111

வீடியோ அழைப்புக்கள் மற்றும் குரல்வழி அழைப்புக்கள் உட்பட கோப்புக்களை பரிமாற்றம் செய்யும் வசதியை தரும் சேவை ஸ்கைப் வழங்கிவருகின்றது.

இச் சேவையானது மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுவருகின்றது.

தற்போது ஐபோன்களுக்கான ஸ்கைப்பின் புதிய பதிப்பு ஒன்றினை அந் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இப் பதிப்பானது ஐபோன்களில் உள்ள Siri எனப்படும் வசதியுடன் இணைந்து செயற்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் குரல் வழி கட்டளைகள் மூலம் ஸ்கைப்பினை செயற்படுத்தக்கூடியதாக இருக்கும்.

மேலும் இவ் வசதியானது வாகன ஓட்டுனர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும்.

இதேவேளை அன்ரோயிட் சாதனங்களுக்கும் இவ்வாறான வசதியினைக் கொண்ட ஸ்கைப்பின் புதிய பதிப்பு விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY