ஆற்றில் கார் மூழ்கி விபத்து: 5 குழந்தைகளுடன் தாய் பலி, இஸ்மாயில் உயிருடன் மீட்பு

0
462

இந்தியாவில்  தெலுங்கானா மாநிலம் மேதக் மாவட்டம் தட்கல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவருக்கு பிரியா (7), ஜோதி, அஸ்மிதா, சமிதா, 10 மாத குழந்தை ஆகிய 5 பெண் குழந்தைகள் இருந்தனர்.

அஸ்மிதா காபி குடித்து கொண்டிருக்கும் போது தன் மீது அதை கொட்டிக் கொண்டார். அதில் அவளது உடல் வெந்தது. வலியால் அலறி துடித்தார்.

உடனே காரில் அஸ்மிதா மற்றும் 4 பெண் குழந்தைகளுடன் ராஜாமணி ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார். உதவிக்கு தனது சகோதரர் நவீனை அழைத்து சென்றார். காரை இஸ்மாயில் என்பவர் ஓட்டினார்.

அப்போது காரேசாம் என்ற இடத்தில் பில்லிவாரு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த ஆற்றை கடந்துதான் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்பதால் ஆற்றை கடந்து செல்ல முடிவு செய்தனர்.

ஆற்றில் கார் இறங்கிய உடனே தண்ணீர் வேகத்தில் கார் அடித்து செல்லப்பட்டது. நவீனும், இஸ்மாயிலும் ஒரு மரக்கிளையை பிடித்து கொண்டனர்.

ஆனால் ராஜாமணியும், 5 பெண் குழந்தைகளும் காருடன் ஆற்றுக்குள் அடித்து செல்லப்பட்டு மூழ்கினர். மரக்கிளையில் தொங்கிய நவீன், இஸ்மாயிலை கிராம மக்கள் கயிறு மூலம் மீட்டனர்.

இந்த நிலையில் ராஜாமணி 5 பெண் குழந்தைகளின் உடல்களுடன் கார் கரை ஒதுங்கியது. 6 பேர் உடல்களை போலீசார் மீட்டனர்.

-Malai Malar-

LEAVE A REPLY