ஸ்பெயின் உணவகத்தில் சிலிண்டர் வெடித்து 77 பேர் படுகாயம்

0
165

ஸ்பெயின் நாட்டில் உள்ள வேலேஸ்-மலாகா நகரில் நடைபெற்ற விழாவின்போது அங்குள்ள ஒரு உணவகத்தின் சமையலறையில் Gas சிலிண்டர் வெடித்த விபத்தில் 77 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்பெயின் நாட்டின் தென்கடலோரப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மலாகா அருகே வேலேஸ்-மலாகா என்ற நகரில் நேற்று உள்ளூர்விழா வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.

விழாவுக்கு வந்தவர்கள் இங்குள்ள ’லா போஹேமியா’ என்ற உணவகத்தில் சாப்பிட குவிந்திருந்தனர். அப்போது, உணவகத்தின் சமையல் அறையில் உள்ள எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீபிடித்தது. இதைகண்ட சமையல் கலைஞர்கள் கூச்சலிட்டு, அங்கிருந்தவர்களை உடனடியாக தப்பிச்செல்லும்படி எச்சரித்தனர்.

பீதியடைந்த மக்கள் உயிர்பயத்துடன் நுழைவுவாயிலை நோக்கி, முந்தியடித்து ஓடினார்கள். அப்போது, பயங்கர சப்தத்துடன் Gas சிலிண்டர் வெடித்து சிதறியது. சிலிண்டர் வெடித்த வேகத்தில் சமையல் அறையில் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறித் தெறித்ததில் 77 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் பலர் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றுவருபவர்களில் ஐந்துபேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

-Malai Malar-

LEAVE A REPLY