பொறுப்புக்களை சரியான முறையில் செய்ய முடியாதவர்களே இனத்துவேச கருத்துக்களை கூறிவருவதாக ஊடகத்துறை பிரதியமைச்சர் தெரிவிப்பு

0
131

தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை சரியான முறையில் செய்ய முடியாதவர்களே இனத்துவேச கருத்துக்களை கூறி நல்லிணக்க்கத்தை சீர்குலைக்க முற்படுவதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார்.

இலங்கை பத்திரிகைப்பேரவை மற்றும் திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த திருமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு 2016.10.01 திருகோணமலையில் நடைபெற்றது.

தேசிய நல்லிணக்கத்தை இந்நாட்டில் ஏற்படுத்துவதற்காக ஊடகவியலாளர்களின் வகிபாகம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்த கொணட பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதான உரையாற்றுகையில் இந்த விடயத்தை குறிப்பிட்டார்ஃ

நல்லிணக்க்கத்தை சீர்குலைக்க முற்படுபவர்கள் மூவினங்களிலும் காணப்படுவதாகவும் இவர்களை சரியான முறையில் இணங்கண்டு கொள்வதுடன் அவர்களுக்கு துணைபோகாதவர்களாக பொதுமக்கள் இருப்பது சிறப்பானதாக அமையும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் இவர்கள் மேற்கொள்ளும் இனத்துவேச விடயங்களை பிரபல்யப்படுத்துவதாக ஊடகங்கள் இருத்தல் கூடாது. ஊடக தர்மங்களை காத்து ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் செயற்படுவதன் மூலம் இன ஜக்கியத்தை கட்டியெழுப்ப முடியுமென்றும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இச்செயலமர்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் இலங்கை பத்திரிகைப்பேரவையின் தலைவர் சிரேஸ்ட்ட சட்டத்தரணி கொக்கல வெல்லால பந்துல வளவாளர்களான பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் எஸ்.தில்லைநாதன் திருகோணமலை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஜன் பத்திரிகைப்பேரவை ஆணையாளர் நிரோசன தம்பவிட உட்பட ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

LEAVE A REPLY