மணிக்கு 250 கி.மீ வேகத்தில் ஜமைக்காவை நெருங்கும் சூறாவளி

0
98

ஜமைக்காவை நெருங்கி வரும் நிலையில் மாத்யூ சூறாவளி லேசாக வலுவிழந்துள்ளது. ஆனால் இன்னும் மணிக்கு 250 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசி வருகிறது. வீடுகளை சேதமாக இது போதுமானது என்கிறார்கள் வானிலை கணிப்பு வல்லுநர்கள்.

தற்போது, இதன் தீவிரம் நான்காம் நிலையை அடைந்துவிட்டதாகவும், இதற்கு முன்னர் மாத்யூ சூறாவளி உச்சக்கட்ட தீவிர நிலையான ஐந்தாம் நிலையில் இருந்ததாகவும் அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

வரும் திங்கள் அன்று இந்த சூறாவளி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

ஜமைக்காவின் தெற்கு கடற்கரை பகுதி மாத்யூ சூறாவளியை முதலில் எதிர்கொள்ள உள்ளது.

ஜமைக்காவின் தலைநகரான கிங்ஸ்டன், இந்த பகுதியில் தான் அமைந்துள்ளது. மேலும், நாட்டின் ஒரே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் இங்குதான் அமைந்துள்ளது.

அங்கு பலமாக அடித்துவரும் புயல் காற்று, தீவின் வடக்கில் உள்ள மான்டீகோ பே உட்பட முக்கிய சுற்றுலா தலங்களை பலமாக தாக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜமைக்கா அரசாங்கம் உச்சபட்ச எச்சரிக்கை நிலையில் இருப்பதாக பிரதமரின் தகவல் தொடர்பு இயக்குனர் கூறியதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

-BBC-

LEAVE A REPLY