அரசியல் தீர்வுக்காக முஸ்லிம்களை தமிழ் இனமாக அடையாளபடுத்த முனையும் வடக்கு முதலமைச்சர் !!!

0
302

(Kaleel musthafa B.Sc )

மட்டக்களப்பில் அன்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் உரையாற்றுகையில் முஸ்லிம்கள் தாய் மொழியை தமிழாக கொண்டாலும், அவர்கள் அரசியல் சுய நலன்களுக்காகவே தங்களை தமிழர்களாக இனம் காட்டாமல் முஸ்லிம்களாக இனம் காட்டுகின்றார்கள் என்று குறிப்பிட்டுள்ளமை வட கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் இல்லை என்று சர்வதேசத்துக்கு வெளிபடுத்தி ஒரு தனித்துவமான முஸ்லிம் சமுகத்தை ஒட்டு மொத்தமாக மறைப்பதற்கான சதியாக கருதப்படுகின்றது.

இந்த நாட்டில் தேசிய இனமாக சிங்களவர் ,தமிழர், முஸ்லிம்கள் என பிரதானமாக காண்ப்படும் போது முஸ்லிம்களும் தமிழர்கள் என்று வடமாகாண முதலமைச்சர் குறிப்பிடுவது முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கான சதிகள் அரங்கேற்றப்படுவதாக கருதப்படுகின்றது.

இரண்டு வெவ்வேறுபட்ட சமுகம் ஒரு மொழியை பேசுவதல் ஒரு சமுகத்தின் தனித்துவத்தை இன்னொரு சமுகம் அரசியல் சுயநலங்களுக்காக தங்களுக்குள் மறைத்து அந்த சமுகத்தின் தனித்துவதை அழித்து முஸ்லிம் சமுகத்தை அடையாளம் இல்லாமல் மறைப்பதற்கு முயற்சிப்பது கடுமையான கண்டனத்துக்குரிய விடயமாகும்.

கடந்த காலத்தில் வட கிழக்கு தமிழ் முஸ்லிம்களின் உறவுகளை பொறுத்த வரையில் மதத்தால் மட்டும் வேறுபட்டாலும் ஒரே பொளதீக சூழலில் பல்வேறு பட்ட விடயங்களில் பின்னி பிணைந்து ஒரு தாய் பிள்ளைகள் போன்று இரண்டு இனங்களுக்கிடையிலான உறவுகள் காணப்பட்டன.

1985 முன்னர் முஸ்லிம் சமுகம் தங்களது அரசி்ல் பயனத்தை தமிழ் தலைவர்களுடன் சேர்ந்தே பயணித்தார்கள் எம்.எஸ்.காரியப்பர் ,எம்.எம். முஸ்தபா,.எம்.இ.எச்.அகமட் அலி .எம்.எச்.எம்.அஸ்ரப் ,செனட்டர் மசூர் மவ்லான போன்ற பெரும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமிழரசு கட்சி யின் பாசறையில் தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்ற பெரும் தலைவர்களின் வழிகாட்டலின் கீழ் இருந்து செயற்பட்டார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது

மதிப்புக்குரிய விக்னேஸ்வரன் ஐயா, அவர்களே ! முஸ்லி.ம்கள் அரசியலுக்காக பிரிந்து செல்லவிலை.

கடந்த காலத்தில் இரண்டர கலந்த தமிழ் முஸ்லிம் உறவுகளில் இருந்து ஒரு போதும் முஸ்லிம்கள் பிரிந்து செல்லவும் இல்லை காட்டி கொடுக்வும் இல்லை, வரலாறுகளை மாற்றி பிழையான கதைகளை கூறி அப்பாவி மக்கள் மனதில் விரோத மனப்பான்மையை மேலும் வளரவிடாதீர்கள்.

அன்று வட கிழக்கு தமிழ் பேசும் சமுகத்தின் தாயக கோட்பாடை முன்னிறுத்தி சுயநிர்ணய உரிமையை கோரி முன்னெடுக்கப்பட்ட விடுதலை போராட்டத்தின் தாரைகை மந்திரமாக தமிழ் பேசும் மக்களின் தாகம் தமிழ் ஈழ தாயகம் என்று மூலை முடுகெல்லாம் ஓங்கி ஒலிக்கப்பட்டதை யாரும் மறக்க முடியாது.

வட கிழக்கில் அரசியல்ரீதியாகவும் ,ஆயுதரீயாகவும் முன்னெடுக்கப்பட்ட விடுதலை போரட்டத்தில் முஸ்லிம்களும் சேர்ந்தே போராடினார்கள் என்பதை தமிழ் பேசும் மக்கள் என்ற பதம் வெளிபடுத்துகின்றது.

விக்னேஸ்வரன் ஐயா அவர்களே ! தமிழ் பேசும் மக்களின் அரசியல் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு

சுதந்திரத்துக்கு பின்னர் வட,கிழக்கு முஸ்லிம்கள் தங்களுக்கு என தனியான அரசியல் கட்சியை இஸ்தாபிக்கவில்லை,தமிழ் அரசியல் தலைவர்களுடன் இணைந்தே தங்கள் அரசியல் பயணத்தை மேற்கொண்டார்கள்.

1956 ஆம் ஆண்டு இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியில் அம்பாரை மாவட்டம் கல்முனை தொகுதியில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாக போட்டியிட்ட எம்.எஸ் .காரிப்பர் அவர்கள் 72 % சதவீத வாக்குகள் 9464 பெற்று பாராளுமண்றம் சென்றார்.

அதே ஆண்டில் இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியில் அம்பாரை மாவட்டம் பொத்துவில் தொகுதியில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாக போட்டியிட்ட எம்.எம்.முஸ்தபா அவர்கள் 64% சதவீத வாக்குகள் 8355 பெற்று பாராளுமன்றம்  சென்றார்.

1965 ஆம் ஆண்டு இடம் பெற்ற பாராளுமண்றதேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியில் திருகோணமலை மாவட்டம் மூதுர் தேர்தல் தொகுதியில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாக போட்டியிட்ட எம்.இ.எச்.முகம்மட் அலி அவர்கள் 92% சதவீத வாக்குகள் 20237 பெற்று பாராளுமன்றம்  சென்றார்.

தமிழ் மாணவர்கள் திறமையாக சித்தியடைந்தும் பல்கலைகழகதுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை, அரசதொழில் வழங்கலில்தமிழ் இளைஞர்கள் புறகணிக்கப்பட்டமை போன்ற பல அநீதிகள் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட போது அதற்கு எதிராக சாத்வீக வழியில் தந்தை செல்வாவோடு சேர்ந்து தமிழ் மக்களுக்காக அகிம்சை போராட்டம் நடத்திய மசூர் மௌலானா அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

மருதமுனையை பிறப்பிடமாக கொண்ட மசூர் மௌலானா அவர்கள் தமிழ் அரசு கட்சியின் செனட் சபை உற்பினாரக தெரிவு செய்யப்பட்டார்.

1976 ஆம் ஆண்டு யாழ்பாணம் வட்டுகோட்டை என்னும் இடத்தில் மேற்கொள்ளபட்ட பிரகடனத்தில் வட்டுகோட்டை தீர்மானத்தை முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் சேர்ந்தே பிரகடனம் செய்தார்கள்.

1977 ஆம் ஆண்டு இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சியில் அம்பாரை மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட மசூர் மௌலானா அவர்கள் 213 வாக்குகளால் பாராளுமன்ற வாய்பை இழந்தார்.

முஸ்லிம் காங்கிறசின் இஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் தமிழ் அரசு கட்சிகாக உழைத்து தமிழ் அரசு கட்சியின் பாராட்டையும் நன்மதிப்பையும், பெற்று தமிழ் அரசு கட்சியின் தலைவர்களால் அடுத்த தலைவர் என அடையளப்படுதப்பட்டார்.

விக்னேஸ்வரன் ஐயா அவர்களே ,தமிழ் பேசும் மக்களின் ஆயுத போராட்ட்த்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு

1976 ஆம் ஆண்டின் வட்டுகோட்டை தீர்மானத்தில் நம்பிக்கை இழந்த தமிழ் பேசும் இழைஞர்கள் ஜனநாக சாத்வீக போராட்டத்தை கைவிட்டு ஆயுத போராட்டதில் நம்பிக்கை வைத்து பலஸ்தீனம் லெபனான் ,பாகிஸ்தன், போன்ற முஸ்லிம் நாடுகளுக்கு ஆயுத பயிற்சிக்காக தமிழ் இழைஞர்கள் முஸ்லிம் பெயர்களில் முஸ்லிம் இழைஞர்களையும் அழைத்து சென்றார்கள் என்பதை மறுக்க முடியுமா?

விடுதலை போராட்ட இயக்கங்களில் முஸ்லிம்களும் உயர் பதவிகளிலிருந்து வழி நடத்தியதை வரலாற்றிலிருந்து அழிக்க முடியுமா?

விடுதலை போராட்டத்தில் அரசியல் துறையிலும் ,இராணுவ பிரிவில் கேணல்களும் ,லெப்ரினன்களும்,பிராந்திய பொறுப்பாளர்களும் முஸ்லிம்கள் இருக்கவில்லையா?

ஒவ்வொரு முஸ்லிம் கிராமத்திலும் முஸ்லிம் இழைஞர்களும் படித்த புத்திஜீவிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழ் பேசும் மக்களின் விடுதலை போராட்டத்துக்கு ஆதரவு அளித்து அவர்களின் மரணத்தினால் அவர்களின் குடும்பங்கள் சீரழிந்த கதையை உங்களால் மறுக்க முடியுமா?

பெரும் தொகையான முஸ்லிம் இழைஞர்கள் தமிழ் பேசும் மக்களின் போராட்ட த்தில் தங்களை தியாகம் செய்யவில்லை என்று கூறமுடியுமா?

தமிழ் பேசும் மக்களின் விடுதலை போராட்டத்தில் முஸ்லிம் இழைஞர்களின் பங்களிப்பை மாவீர்ர் துயிலும் இல்லம் பறைசாட்டுமா?

போராட்ட காலத்தில் அயல் கிராம தமிழ் இழைஞர்களை இராணுவத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கு முஸ்லிம் தாய்மார்கள் தங்களின் உள் வீட்டில் தமிழ் இழைஞர்களை மறைத்து வைத்து முன் விறாந்தையில் காவல்காத்த வரலாறு தெரியுமா?

இராணுவத்தின் திடீர் சுற்றி வளைப்பின் போது அயல் கிராம தமிழ் இழைஞர்களை வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட பல முஸ்லிம் இழைஞர்கள் இதுவரைக்கும் காணாமல் போய்யுள்ளார்கள் என்ற கதை தெரியுமா?

இராணுவ கெடுபிடியும் அச்சுறுத்தலும் அதிகரித்து தங்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத போது கல்வியை தொடரமுடியாத சூழ்நிலையில் அயல் கிராம முஸ்லிம் தாய்மர்கள் எவ்விதமான பிரதிபலனும் எதிர்பாராது தமிழ் இழைஞர்களின் கல்வியை தொடர தங்கள் வீடுகளில் அடைக்கலம் கொடுத்து, தங்களின் பிள்ளைகள் போல் பாதுகாத்து ,வைத்தியராகவும்,பொறியிலாளராகவும், பிரதேச செயலாளர்களாகவும் ,சட்டதரணியாகவும்,ஆசிரியர்களாகவும் தமிழ் பேசும் சமுகத்துக்கு முஸ்லிம் தாய்மர்கள் செய்த பங்களிப்பு உங்களுக்கு தெரியுமா?

போராட்டத்தின் போது சகோதர இயக்கங்களுக்குள் ஏற்பட்ட முறன்பாடுகளால் சகோதர படுகொலைகள் மலிந்து மனித உயிருக்கு மதிப்பில்லாமல் தமிழ் இழைஞர்கள் தங்கள் உயிர்களை உள்ளங்கையில் வைத்து முஸ்லிம் கிராமங்களுக்குள் தஞ்சம் புகுந்த போது முஸ்லிம் தாய்மார்கள் யார் என்ன அமைப்பு என்ற வித்தியாசம் பாராமல் ஒரு வீட்டுக்குள் இரு இயக்கங்களை வைத்து வாரங்கள் மாதங்களாக எவ்வித பிரதிபலன் பாராது சமைத்து கொடுத்து யார் யார் என்று காட்டி கொடுக்காமல் பாதுகாத்த வரலாறு தெரியுமா?

முஸ்லிம்கள் அரசியலுக்காக விலகிசெல்லவில்லை விரட்டியடிக்கப்பட்டார்கள். விக்னேஸ்வரன் ஐயா வின் கருத்துபடி தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட இஸ்லாம் மதத்தை பின்பற்றுவேர் தமிழராகவே 1950 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்து தமிழ் மக்களுடன் இணைந்து செயற்பட்டனர் பின்னர் ஒரு இனத்துக்குள் இன சுத்திகரிப்பு செய்யப்பட்டு முஸ்லிம்களாக அடையளப்படுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள் ,

1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கையில் தமிழர்களாக இருந்த முஸ்லிம்களை புறக்கணித்தது தொடர்ந்து இனைந்து செயற்பட முடியாத காரனத்தால் தானே.

1990 ஆம் ஆண்டு தமிழ் விடுதலை இயக்கத்திலிருந்து செயற்பட்ட முஸ்லிம் போராளிகளை அதே விடுதலை இயக்கம் கொன்று குவித்தது பிரிந்து செயற்படவதற்கு தானே.

1990 ஆம் ஆண்டு சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வட புல முஸ்லிம்களை வெறும் கையுடன் ஒரே நாளில் விரட்டியடித்தது இனைந்து செயற்பட முடியாத காரணத்தால் தானே.

1990 ஆம் ஆண்டு காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுகொண்டிருந்த முஸ்லிம்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து சுமார் 230 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கொண்று குவித்த்து இனைந்து செயற்பட முடியாத காரணத்தால் தானே.

1990 ஆம் ஆண்டு ஏறாவூர் நகரில் நித்திரையில் இருந்த 120 க்கும் மேற்பட்டோரை கொண்று குவித்த்து இனைந்து செயற்பட முடியாத காரணத்தால் தானே.

1990 ஆம் ஆண்டு அழிஞ்சிபொத்தானை ,கட்டுவன்வில் அத்துகல போன்ற கிராமங்களில் நித்திரையில் இருந்த 200 க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கொண்று குவித்தது இனைந்து செயற்படமுடியாத காரணத்தால் தான்னே.

1990ஆம் ஆண்டு ஹஜ் யாத்திரையை முடித்து வந்த 100 க்கும் அதிகமான காத்தான்குடி முஸ்லிம்கள் வழி மறித்து கொல்லப்பட்டு புதைக்கப்பட்டது எதற்காக பிரிந்து செயற்படதானே.

1990 ஆம் ஆண்டு பொலிஸ் நிலயங்கள் சுற்றிவழைக்கப்பட்டு 300 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பொலிசார் கொல்லப்பட்டது பிரிந்து செயற்பட்தானே.

பொத்துவில் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையான முஸ்லிம் வர்தக நிலையங்கள் கொள்ளையடித்து தீ இட்டு கொளுத்தப்பட்டது எதற்காக பிரிந்து செல்லதானே.

100 க்கும் மேற்பட்ட முஸ்லிம் புத்து ஜீவிகளும் ,300 க்கும் மேற்பட்ட முஸ்லிம் வர்தகர்களும் கடத்தி கொல்லப்பட்டது பிரிந்து செயற்படத்தானே.

2003 ஆம் ஆண்டு மூதுர்,கின்னியா முஸ்லிம்கள் சொந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டது பிரிந்து செயற்படத்தானே.

தமிழ் பேசும் மக்களின் விடுதலை போராட்டத்துக்கு முஸ்லிம் இழைஞர்களும் ,முஸ்லிம் தாய்மார்களும் செய்த தீயாகத்துக்கும் இழப்புக்கும் கிடைத்த வெகுமானமா ? அரசியல் தீர்வுகளை பெற்று கொள்ள முஸ்லிம்களை தமிழராக அடையாளம் காணும் நீங்கள் இதுவரைக்கும் முஸ்லிம்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நடந்துகொண்டிர்களா, பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்ட வட புல முஸ்லிம்களை மீழ் குடி அமர்த்த நீங்கள் எடுத்த நடவெடிக்கை என்ன ?

போராட்டகாலத்தில் வாழமுடியாமல் கைவிட்டு போன முஸ்லிம்களின் காணிகளை அரசியல் வாதிகளின் அனுசரனையுடன் பொறுப்புள்ள சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் முஸ்லிம்களின் காணிகளை கபழிகரம் செய்கின்றார்களே.

,தமிழ்ர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களின் நிர்வாகத்தின் கீழ் முஸ்லிம்கள் சேர்ந்து வாழ்கின்றார்கள் ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் உங்களால் சேர்ந்து வாழமுடியாமல் தமிழ் பிரதேச செயலகம் ,தமிழ் கல்வி வலயம், என்று ஒவ்வொரு விடயத்திலும் பிரிந்து செல்லும் நீங்கள் எவ்வாறு முஸ்லிம் ஒரு தனித்துவமான சமுகம் இல்லை அது தமிழ் சமுகம் என்ற கருதுபடி கூறமுடியும், உன்மையில் முஸ்லிம்கள் தமிழ் சமுகம் என்று நீங்கள் கூறுவது அரசியல் சுகபோகங்களுக்காவா ?

விக்னேஸ்வரன் ஐயா அவர்களே

இந்த நாட்டில் முஸ்லிம்கள் ஒரு தனித்துவமுள்ள சமுகம் உங்கள் அரசியல் இலாபங்களுக்காக ஒரு மதத்தை,ஒரு சமுகத்தை கொச்சைபடுத்தி இழிவுபடுத்தி இனங்களுக்கிடையே முறன்பாடுகளை தோற்றுவித்து மக்களை உசுப்பேத்தி ,துயரங்களை உருவாக்கி ,மக்களின் துயரத்தில் அரசியல் செய்வதை கைவிட்டு முஸ்லிம்களை அரவனைத்து இணக்க அரசியல் மூலம் சமுகத்தின் அபிலாசைகளை பெற்றுக்கொள்ள முன்வாருங்கள்.

தமிழ் மக்களின் அபிலாசைகளான இணைந்த வட கிழக்கு நிர்வாக அலகை பெறுவதில் முஸ்லிம்கள் ஒரு போது பிரிந்து அல்லது தடையாக செயற்படமாட்டார்கள். இந்த நிர்வாக அலகில் முஸ்லிமகளின் நிலைபாடு என்ன என்பதை தெரியப்படுத்தி முஸ்லிம்களிடையே காணப்படும் சந்தேகங்களையும்,அச்சத்தையும் இல்லாமல் செய்து முஸ்லிம்களை அரவணைத்து செயற்பட தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து நின்மதியாக வாழ வேண்டும் என்று விருபுகின்ற அரசியல் தலைமைகள் முன்வரவேண்டும்.

LEAVE A REPLY