விஞ்ஞான ஆய்வு கூடம் மற்றும் பாட ரீதியான ஆசிரியர் பற்றாக்குறை: பெற்றோர் விஷனம்

0
504

(அப்துல்சலாம் யாசீம்-)

திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திற்குற்பட்ட ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 1 தொடக்கம் 13 வரை வகுப்புக்கள் காணப்படுகின்ற போதிலும் விஞ்ஞான ஆய்வு கூடம் மற்றும் பாட ரீதியான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும் பெற்றோர்களும்-மாணவர்களும் விஷனம் தெரிவிக்கின்றனர்.

சுமார் 270 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பாடசாலையில் 18 ஆசிரியர்கள் தேவைப்படுகின்ற போதிலும் 12 ஆசிரியர்களே உள்ளனர்.நகர்புற பாடசாலைகளில் கல்வி அபிவிருத்தி விடயத்தில் அக்கறை காட்டுகின்ற கல்வி அமைச்சும் – கல்வி திணைக்கள உயரதிகாரிகளும் அதிகஷ்ட பாடசாலைகளாக இணங்கானப்பட்ட பாடசாலைகளின் அபிவிருத்தியில் அக்கறை காட்டுவதில்லையெனவும் பெற்றோர்கள் கவலையை வௌிப்படுத்துகின்றனர்.

பாடரீதியாக மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் அதிபர் ஊடாக கல்வி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

விஞ்ஞான ஆய்வு கூடம் 06ம் ஆண்டு தொடக்கம் 11ம் ஆண்டு வரை தேவைப்படுகின்றதை கல்வி மான்கள் தெரிந்திருந்தும் பின் தங்கிய கிராம பாடசாலைகள் விடயத்தில் கவனக்குறைவாக செயற்படுவதாகவும் பெற்றொர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எதிருவரும் காலங்களில் நியமிக்கப்படுகின்ற ஆசிரியர் நியமனங்களிலாவது ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் அக்கறை காட்டுமாறும் விஞ்ஞான ஆய்வு கூடமொன்றினை அமைத்து தருமாறும் பெற்றோர்களும் மாணவர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

LEAVE A REPLY