சுகாதார விஞ்ஞான மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

0
200

(சலீம் றமீஸ்)

அட்டாளைச்சேனையில் இயங்கி வரும் சுகாதார விஞ்ஞான மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (01) அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி ஆராதணை மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளரும், தவிசாளருமான டாக்டர் எம்.எச்.முஹம்மட் முனாஸிக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதி கலாநிதி யு.எல்.செய்னுடீன், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் கௌரவ எம்.பி.முகைதீன் விசேட அதிதிகளாக அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ், அம்பாறை மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக், அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் தலைவரும் உதவி கல்விபணிப்பாளருமான யு.எம்.நியாஸி மௌலவி, உட்பட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

ஆயுள்வேத மருத்துவ துறையில் 32 மாணவர்களும், மருத்துவ ஆய்வு கூட துறையில் 17 மாணவர்களும், மருந்தாளர் துறையில் 26 மாணவர்களும், இயன் மருத்துவ துறையில் 07 மாணவர்களும், தாதியர் துறையில் 14 மாணவர்களும், கலைப்பரிவில் 17 மாணவர்களும் பட்டம் பெற்றதுடன் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்திற்கு தெரிவாக தவறிய மாணவர்களை பட்டதாரிகளாகவும், தொழிநுட்பவியலாளர்களாகவும் இக்கல்லூரி உருவாக்கி வருவதுடன் மாணவர்களின் திறமைக்கேற்ப 30 துறைகளில் கற்கைநெறிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இக்கல்லூரியின் முகாமைத்துவ பணிப்பாளரும், தவிசாளருமான டாக்டர் எம்.எச்.முஹம்மட் முனாஸிக் தெரிவித்தார்.

LEAVE A REPLY