தபால் சேவைகள் முஸ்லிம் விவகார, அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராக எச்.எம்.எம்.முஸ்தபா நியமனம்

0
317

hmm-musthaffa-unp(ஏ.எல்.டீன்பைரூஸ்)

தபால் மற்றும் தபால் சேவைகள் முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராக ஐக்கிய தேசிய கட்சியின் காத்தான்குடி மத்திய குழுவின் சிரேஸ்ட உறுப்பினரும், அமைப்பாளருமான எச்.எம்.எம்.முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஐக்கிய தேசிய கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் மாத்திரமின்றி சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்சிமாறா தொண்டனாக இருந்து செயல்பட்டுவருவதன் காரணமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட பணிப்புரையின்கீழ் இவருக்கான நியமனம் கடந்த 28.09.2016 புதன்கிழமை தபால் மற்றும் தபால் சேவைகள், முஸ்லிம் சமய கலாசார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமினால் வழங்கிவைக்கப்பட்டது.

காத்தான்குடி மண்ணிலிருந்து கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்காக பல்வேறு வழிகளிலும் உழைத்துவரும் எச்.எம்.எம்.முஸ்தபா ஒரு பிரபல சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சின் இணைப்புச் செயலாளரான எச்.எம்.எம்.முஸ்தபா தனது ஆரம்ப கால கல்வியை காத்தான்குடி மட் அந்நாசர் வித்தியாலயத்திலும் தனது உயர் கல்வியை காத்தான்குடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) கற்று தற்போது ஒரு அரச உத்தியோகஸ்தராக பணியாற்றி வருகின்றார்.

LEAVE A REPLY