உள் அர்த்தம்

0
289

gossiping1(நிஷவ்ஸ்)

அன்று டீச்சர்
அழகாய்ச் சொன்னார்
அ – அம்மா
ஆ – ஆடு
அம்மா சொன்ன படி
ஆடுகிறது தமிழகம்.

இ- இலை
ஈ – ஈடு
கஞ்சா இலையால்
காணி ஈட்டிலே

உ-உரல்
ஊ-ஊசி
ஊசி போல் இருக்கிறார்
ஒரு பிள்ளை பெற்றபின்
உரல் போல் கொழுக்கிறார்
தேசிய விதி இது.

எ-எருமை
ஏ-ஏணி
எருமை மாட்டை
ஏணியில் ஏற்றினாலும்
அரசியல் வாதியின்
ஆசை அகற்தல் கடினம்.

ஒ – ஒன்று
ஓ – ஓதல்
ஓதுகின்ற மதரஸாவில்
ஓரிடத்தில் இருக்க முடியாது
ஓயாமல் காட்டுவார் -ஒன்று

பின்னர் டீச்சர்
பிரியமாய் சொன்னார்
படம் பார்
பாடம் படி.
பார்த்த படங்களிலே
படித்த பெரும் பாடம்
நடித்தவனுக்கு அரை லூசு
எடுத்தவனுக்கு முழு லூசு.

அடுத்து டீச்சர்
அழகாய்ச் சொன்னார்
முன் காலை எழு
முகம் கழுவு.
முன் காலை மட்டுமல்ல
முழுப் பொழுதும் சிலர்
முக நூலில் கழுவுகிறார்
மோசமாய் பிறர் பலாயை.

அன்று டீச்சர்
அன்புடன் கூறியதன்
உள் அர்த்தம் என்ன வென
உண்மையில் புரியுது இப்போ.

LEAVE A REPLY