ஊடகத்துறை ஆட்சியாளர்களின் நலன் பேனும் அமைப்பாகும்: அப்துல்லா மஹ்ரூப்

0
153

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

தகவலறியும் உரிமையை முதன் முதலாக 250 வருடங்களுக்கு முன் உலகுக்கு அறிமுகப்படுத்திய நாடுதான் சுவீடன் இரண்டாவது நாடாக அமெரிக்கா உட்பட மெக்ஸிக்கோ போன்ற நாடுகளில் கருத்து சுதந்திரம் தகவலறியும் உரிமை என்பன உலகின் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் காணப்படுகின்றது.

தகவலறியும் உரிமையை இலங்கை பாராளுமன்றத்தில்225 உறுப்பினர்களின் உதவியுடன் அங்கிகரித்து நல்லாட்சியில் சுதந்திர ஊடக கருத்துக்களை வெளிப்படையாக செயற்பட வைத்தமையும் நாமே. இதனை முன்னெடுத்து செல்ல நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க போன்றோரும் முக்கியமானவர்களாவர் என இன்று(01)தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் ஊடகவியலாளர்களின் வகிபங்கு எனும் தொனிப்பொருளில் திருகோணமலை ஜெகப்பார்க் விடுதியில் இலங்கை பத்திரிகை பேரவையினால் இடம் பெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வின் போதே திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கடந்த கால அரசில் கருத்துக்களை வெளியிட்ட சிங்கள மகன் லசந்த விக்ரமதுங்க ,தமிழ் மகன் சிவராம் போன்ற ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் தற்போது சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட முடியும். இதனால் நாங்கள் சிறையில் அடைக்கப்படவும் மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY