வேல்லம்மாள் குழுமம் தலைவர் திரு முத்துராமலிங்கத்துடன் டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன் சந்திப்பு

0
171

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் பொதுசன தொடர்பாளரும், திருகோணமலை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற சுகாதார பகுதி உயர் அதிகாரியுமான டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன் தனது இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டு வருகையின் போது வேல்லம்மாள் குழுமம் தலைவர் திரு.M.V. முத்துராமலிங்கத்துடன் சந்தித்து உரையாடினார். இச் சந்திப்பு வேல்லம்மாள் மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் நடைபெற்றது.

தமிழகத்தில் கடந்த 30 வருடங்களாக மூன்று பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரி, மருத்துவமணை மற்றும் உயர்தர உயர்நிலை பாடசாலைகள் என 43 நிறுவனங்களை திறம்பட வேல்லம்மாள் குழுமம் நடத்தி வருகிறது.

இச் சந்திப்பின்போது உதவி தலைவர் டாக்டர் அசோகன் மற்றும் மன நிலை / உள நல பகுதி பேராசிரியர் ராமானுஜம் அவர்களும் உடன் இருந்தார்கள். இந்த நான்கு மணி நேர சந்திப்பின் போது மருத்துவமணையின் சிறப்பு அம்சங்களை எடுத்து கூறி, நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிறந்த சேவைகள் செய்வதாக எடுத்து கூறினார்.

தற்போது புதிதாக தொடங்கியுள்ள ” சிறுகாய இருதய அறுவை சிகிட்ச்சை – Minimal Invasive Cardiac Surgery ” பற்றி எடுத்து கூறினார். இலங்கையில் இருந்து வரும் இருதய அறுவை சிகிட்ச்சை நோயாளிகளுக்கு சிறப்பான சலுகைகள் செய்வதாகவும் உறுதி கூறினார்.

இந்த நான்கு மணி நேர சந்திப்பு மிகவும் பிரயோசனமாக இருந்ததாக டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY