வைத்தியர் தாக்கப்பட்டார்: திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதி

0
596

(அப்துல்சலாம் யாசீம்-)

திருகோணமலை -பதவிசிறிபுர பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மது போதையில் வந்த நபரொருவரினால் தாக்குதலுக்குள்ளான நிலையில் இன்று (01) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தாக்குதலுக்குள்ளான வைத்தியர் சாம்பசிவம் முரளிதரன் (44 வயது) எனவும் பதவிசிறிபுர பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவர் எனவும் தெரியவருகின்றது.

குறித்த வைத்தியர் விடுதியில் தங்கியிருந்த போது இன்று (01) மாலை 4-20 மணியளவில் மது போதையில் வந்த நபரொருவரினால் தாக்கப்பட்டதாக பதவிசிறிபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தாக்குதல் நடாத்தியதாக சந்தேகிக்கப்பட்டவர் தலைமறைவாகியுள்ளதாகவும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பதவிசிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY