புதிய காத்தான்குடி சமூக பொலிஸ் குழு, கிராம மட்ட சிறுவர் கண்காணிப்பு குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு

0
199

–எம்.ஐ.அப்துல் நஸார்-

புதிய காத்தான்குடி கிழக்கு 167B கிராம சேவகர் பிரிவில் இயங்கிவரும் சமூக பொலிஸ் குழு மற்றும் கிராம மட்ட சிறுவர் கண்காணிப்பு குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் சர்வதேச சிறுவர் தினமான இன்று (01) வெகு விமர்சையாக நடைபெற்றன.

சமூக பொலிஸ் குழுவின் தலைவர் ஏ.எல்.முனீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுகளில் பிரதம அதிதியாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார திலங்க ஜெயலால் கலந்து கொண்டார்.

புதிய காத்தான்குடி கிழக்கு 167B கிராம சேவகர் பிரிவில் பாலர் கல்வியினை வழங்கி வருகின்ற அல்-உமர் பாலர் பாடசாலை. அல்-மஸ்ஜிதுல் அன்வர் பாலர் பாடசாலை, அன்வர் நகர் பாலர் பாடசாலை. அப்ரார் பாலர் பாடசாலை, எலைட் பாலர் பாடசாலை மற்றும் பையினா கிட்ஸ் கொலேஜ், ஆகிய பாலர் பாடசாலைகளைச் சேர்ந்த 175 மாணவர்கள் நிகழ்வுகளில் பங்குபற்றினர்.

காலை வேளையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வு மதியம் வரை தொடர்ந்தது.

பாலர் பாடசாலை மாணவ, மாணவிகள் குழு நிகழ்ச்சிகளும் தனி நிகழ்ச்சிகளிலும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் பங்குபற்றினர்.

இந் நிகழ்வில் புதிய காத்தான்குடி கிழக்கு 167B கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி. சில்மியா அன்சார், சமூக பொலிஸ் குழுவிற்குப் பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் ஆசிக் அஹமட் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஜெயலால் விகரமசிங்க, கிராம மட்ட சிறுவர் கண்காணிப்பு உத்தியோகத்தர் சக்தி செல்வநாயகம், சர்வோதய கள உத்தியோகத்தர் திருமதி. பத்மா, சமூக பொலிஸ் குழு நிருவாக உறுப்பினர்கள், பாலர் பாடசாலை ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள், அல்-உமர் சனசமூக நிலைய உறுப்பினர்கள். அப்ரார் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், என பெருமளவானோர் கலந்து கொண்டனர்

இப் பிரதேசத்தில் பாலர் பாடசாலைகளை இணைத்து ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது சிறுவர் தின நிகழ்வு இதுவாகும்.

இந் நிகழ்வுக்கான ஆலோசனைகள் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெதரவினாலும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY