கலகெதர – மாவத்தகம பிரதேசத்தின் நீர் விநியோகததிட்டத்தில் 18,500 பேர் நன்மையடைவர்: பரகஹதெனியவில் ரவூப் ஹக்கீம்

0
164

-ரிம்சி ஜலீல்-

கடந்த தசாப்தங்களா குருநாகல் மாவட்டம், கலகெதர – மாவத்தகம பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்திப்பதற்கு கலகெதர – மாவத்தகம குடி நீர் வழங்கும் திட்டத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (1/10/2016) ம் திகதி பரகஹதெனிய மற்றும் மாவத்தகம பிரதேசங்களில் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் தேசிய நீர் வழங்கல் திணைக்களத்தின் தேசிய இணைப்பாளர் உயர்
நீதீ மன்ற சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா தலமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் மாவதகம மற்றும் கலகெதர நகரங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்ட்டுள்ள நீர் விநியோகதத்தை மேலும் பல பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்படவுள்ளது. இதனால் 18,500 பேர் நன்மையடையவுள்ளனர்.

இத்திட்டத்திற்க்காக 3126 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஷர்ஷா மேற்கொண்ட முயற்சியினால் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துகொட உட்பட பலர் கலந்துகொண்டனர்..

LEAVE A REPLY