மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 வறிய குடும்பங்களுக்கு வீடமைத்துக் கொள்ள நிதியுதவி வழங்கி வைப்பு

0
137

(-ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டு வசதியற்றுக் காணப்படும் 22 வறிய குடும்பங்களுக்கு வீடமைத்துக் கொள்வதற்கான காசோலைகள் சனிக்கிழமை (ஒக்ரோபெர் 01, 2016) வழங்கி வைக்கப்பட்டன.

ஏறாவூர் நகர சபையில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் காசோலைகளை வழங்கி வைத்தார். வீடமைப்புக்காக மூன்று கட்டங்களாக வழங்கப்படவிருக்கும் நிதியளிப்பில் முதற்கட்டமாக தலா 50 ஆயிரம் ரூபாவுக்கான காசோலைகள் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

பயனாளிகள் எவ்வளவு விரைவாக வீடமைப்பு வேலைகளை ஆரம்பிக்கின்றார்களோ அவ்வளவு விரைவாக அடுத்த கட்டக் கொடுப்பனவான 60 ஆயிரம் ரூபாவும் 3ஆம் கட்டக் கொடுப்பனவான 40 ஆயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்படும் என தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஐ.எல்.எம். அக்ரம் தெரிவித்தார். இந்நிகழ்வில் பயனாளிகள் உட்பட இன்னும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY