காட்டு யானை தாக்கி விவசாயி முஹம்மது உஸனார் வபாத்

0
1804

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள தும்பாலஞ்சோலை எனுமிடத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் காட்டு யானை விவசாயி ஒருவரை வழிமறித்துத் தாக்கியதில் அவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.

ஏறாவூர் ஜின்னா வீதி ஐயங்கேணியைச் சேர்ந்த ஹச்சி முஹம்மது முஹம்மது உஸனார் (வயது 54) என்பவரே கொல்லப்பட்டவராகும். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, மாடு மேய்க்கும் தொழிலாளியான இவர் கிணற்றுக்குச் சென்று நீர் எடுத்துக் கொண்டு வரும்போது திடீரென வழிமறித்த காட்டு யானை விவசாயியை விரட்டிச் சென்று தாக்கியுள்ளது.

இதன் காரணமாக அவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். இது ஆட்களைத் தாக்கி வரும் தனியன் யானை என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

சம்பவத்தைக் கேள்வியுற்றதும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் விவசாயின் சடலத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு ஸ்தலத்திற்கு விரைந்தார்.

பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் மற்றும் கரடினாறு பொலிஸார் ஆகியோர் ஸ்தலத்துக்குச் சென்று சடலத்தை பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு வந்துள்ளனர். இச்சம்பவம் பற்றி கரடியனாறு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY