வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் 2016 சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

0
240

-Mi.அஸ்பாக்-

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் சிறுவர் நலப்பரிவு ஏற்பாடு செய்திருந்த சிறுவர் தின நிகழ்வு ஒன்று கடந்த வியாழக்கிழமை வைத்தியசாலை கட்டிடத்தில் நடைபெற்றது.

அல்-கிம்மா நிறுவனத்தின் பிரதான அனுசரணையில் சிறுவர் நல வைத்திய அதிகாரி Dr சியாமா பண்டார அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாழைச்சேனை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்களான Dr தட்சணா மூர்த்தி , Dr பவுல் ராஜ் மதன் மற்றும் அல்கிம்மா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹாறூன் ஸஹ்வி, பிரதிப்பாளர் எச்.எம். ஜாபிர், நிறுவனத்தின் கணக்காளர் ஏ.எல். இஸ்ஸதீன் வைத்தியசாலையின் நிறுவாக உத்தியோகத்தர் சட்டத்தரணி எச். எம். பாறூக் மற்றும் ISRC அமைப்பின் பணிப்பாளர் ஜுனைட் நளீமி ஆகியோரும் மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக தாய்சேய் உணவறை ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது. மேலும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களும் இனிப்புப் பண்டங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

LEAVE A REPLY