இந்திய தொலைக்காட்சிகளுக்கு தடை விதித்தது பாகிஸ்தான்

0
113

எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் பாகிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்து, காஷ்மீரிலும், நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் பயங்கரவாத தாக்குதல்கள்

நடத்துவதற்கு பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டினர். இதுகுறித்து ராணுவ உளவுப்பிரிவுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்தன.இதையடுத்து, ராணுவ அதிரடிப்பிரிவு கமாண்டோக்கள் அங்கு சென்று, 28–ந் தேதி நள்ளிரவு தொடங்கி 29–ந் தேதி அதிகாலை வரை பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து துல்லியமான தாக்குதல்களை அதிரடியாக நடத்தினர். இதில் 38 பயங்கரவாதிகளும், பாகிஸ்தான் சிப்பாய்கள் 2 பேரும் கொன்று குவிக்கப்பட்டனர். 7 பயங்கரவாத முகாம்கள் அழித்து, நிர்மூலமாக்கப்பட்டன.

இந்த தாக்குதலுக்கு பிறகு இரு நாட்டு எல்லையிலும் பதட்டமான சூழல் காணப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மற்றொரு நடவடிக்கையை பாகிஸ்தான் எடுத்துள்ளது. பாகிஸ்தானில் ஒளிபரப்பாகும் அனைத்து இந்திய டிவி சேனல்களுக்கும் தடைவிதித்து பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து PERMA எனப்படும் பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் உள்ள தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இந்த உத்தரவை பின்பற்றவில்லை என்றால் அக்டோபர் 15-க்கு பிறகு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இன்றிலிருந்து இந்திய டிவி சேனல்களை தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Daily Thanti-

LEAVE A REPLY