உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை வைத்தியசாலையின் சிறுவர் நல பிரிவில் நிகழ்வு

0
154

(MI.அஸ்பாக்)

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு அல்-கிம்மா நிறுவனத்தின் அணுசரணையில் வாழைச்சேனை வைத்தியசாலையின் சிறுவர் நல பிரிவில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில்வா ழைச்சேனை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்களான வைத்தியர் தட்சணா மூர்த்தி, வைத்தியர் பவுல் ராஜ் மதன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சிறுவர் நல வைத்திய பிரிவின் வைத்திய அத்தியட்சகர் சியாமா பண்டார அவர்களின் தலைமையில் மேற்படி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தாய்சேய் உணவறை ஒன்றும் இந்நிகழ்வின் சிறப்பம்சமாக திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி), பிரதிப்பணிப்பாளர் எச்எம். ஜாபிர், கணக்காளர் ஏ.எல். இஸ்ஸடீன் மற்றும் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய அதிகாரிகள், ஐ.எஸ்.ஆர்.சீயின் பணிப்பாளர் ஜுனைட் நளிமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறுவர்களுக்கான அன்பளிப்புப்பொருட்களும் இணிப்புப்பண்டங்களும் வழங்கிவைத்து மகிழ்விக்கப்படனர்.

LEAVE A REPLY