அம்பாறை மாவட்ட அபிவிருத்திலும் அதிக கவனம் செலுத்தப்படும்: முஹம்மட் நஸீர்

0
171

சப்னி அஹமட்-

’அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தின் கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிக அக்கறை செலுத்திவருவதுடன் இப்பிரதேசத்தினை அபிவிருத்திகளை மேற்கொள்ளும் விதம் தொடர்பான விரிவான கலந்துரையாடலிலும் அப்பிரதேசத்தின் அபிவிருத்திலும் அதிக கவனம் செலுத்தப்படும்’ என கிழக்கு மாகான சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் ஏல்.எல் முஹம்மட் நஸீர் இன்று (01) திடீர் விஜயம் ஒன்றை பொத்துவில் பிரதேசத்திற்கு மேற்கொண்டு அங்குள்ள கோமாரி வைத்தியசாலைக்கும், மத்திய ஆயுர்வேத மருந்தகதில் புதிதாக நிர்மானிக்க பட உள்ள கட்டிடத்திற்கான இடத்தினை பார்வையிட்ட பின்னர் மினாறுல் உலூம் வித்தியாலய அபிவிருத்தி குழுவுடன் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கொண்டவாறு உரையாற்றினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகள் அதிகம் உள்ள பிரதேசங்களில் ஒன்றான இந்த பிரதேசத்தின் அபிவிருத்தியில் அன்மைக்காலமாக நாம் எமது கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் அதிக ஈடுபாடுடன் செயற்பட்டு வருகின்றதுடன் இந்த பிரதேசத்தின் காணப்படுகின்ற சுகாதார கல்வி துறையினை சீராக மேற்கொள்வதற்கும் நாம் எப்போதும் பின் நிற்கமாட்டோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அன்மையில் அதன் பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம் ஒன்றினையும் நிறுவுவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை நடைமுறைப்படுத்தி அதனை பெற்றுக்கொடுத்தோம். அது போல் அன்மையில் சுகாதாரத்துறையில் வைத்தியசாலைகளுக்கான புதிய கட்டிட வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்து இந்த பிரதேசத்தின் சுகாதார அபிவிருத்தியில் கூடிய கவனத்தினை இன்னும் மேற்கொண்டு வருகின்றோம்.

அதுபோல் இப்பிரதேசத்தின் கல்விப்பிரச்சினைகளைப்பற்றி விசேட கவனம் செலுத்தி ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை கல்வி அமைச்சருடன் பேசிவருகின்றோம் அப்பிரச்சினை விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.- என்றார்.

மேலும், பொத்துவில் பிரதேசத்தின் கல்விக்கு, சுகாதாரத்திற்கும் பாரிய நிதி ஒதுக்கீடுகள் மூலம் இன்னும் பலவகையான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்,எனவும் தற்போது கூட சுகாதார அபிவிருத்திகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY