பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி தோல்வி

0
166

பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. 20 ஓவர் தொடரை பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் தொடரில் முதல் ஆட்டம் ஷார்ஜாவி பகல்-இரவாக நேற்று நடந்தது.

‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல் டர் பாகிஸ்தான் அணியை முதலில் விளையாட அழைத்தார்.

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 284 ரன் குவித்தது. மின்விளக்கு கோளாறால் ஒரு ஓவர் குறைக்கப்பட்டது.

பாபர் ஆசம் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 131 பந்தில் 120 ரன்னும் (8 பவுண்டரி, 3 சிக்சர்) தொடக்க வீரர் சர்ஜில்கான் 43 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். பிராத்வெயிட் 3 விக்கெட் கைப்பற்றினார்.

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 49 ஓவர்களில் 287 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி 38.4 ஓவர்களில் 175 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 111 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சாமுவேல்ஸ் அதிகபட்ச மாக 46 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். முகமது நவாஸ் 4 விக்கெட்டும், ஹசன் அலி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

LEAVE A REPLY