ஓட்டமாவடிக்கான சுத்தமான குடிநீர் வழங்கல் முதலாவது திட்டம் ஆரம்பம்

0
229

(எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்/பைரூஸ் )

கல்குடா மஜ்லிஸ் ஷூராவின் அயராத முயற்சியினால் முன்னெடுக்கப்பட்ட கல்குடாவிற்கான சுத்தமான குடிநீர் வழங்கலின் முதலாவது திட்ட நிகழ்வு இன்று 01.10.2016ம் திகதி முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளருமான கணக்கறிஞர் HMM றியாலினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கல்குடா மஜ்லிஸ் ஷூராவின் தலைவர் மெளலவி ஹாமி சதக்கா, மெளலவி இஸ்மாயீல், முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளருமான கணக்கறிஞர் HMM றியாழ், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் KBS. ஹமீட், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித்திட்டமில் பணிப்பாளர் SA.றியாஸ், இளைஞர் சேவை அதிகாரி AM.ஹனீபா, மாவட்ட பதிவாளர் MI.மாஜிதீன் மற்றும் கல்குடா மஜ்லிஸ் ஷூராவின் பிரதிநிதிகள், முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா மத்திய குழு உறுப்பினர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள், கட்சிப்போராளிகள், ஆதவாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட முதலாவது கட்ட நீர் வழங்கல் மூலம் இப்பிரதேசத்தின் நீண்ட காலத்தேவையாகவும் பாரிய பிரச்சினையாகவும் இருந்து வந்த சுத்தமான குடிநீர் பிரச்சினைக்கு ஓரளவுக்கேனும் இதன் மூலம் தீர்வு கிடைக்குமென நம்பப்படுகிறது.

கடந்த ஆட்சிக்காலத்தில் கல்குடா மஜ்லிஸ் ஷூராவினால் பல்வேறு முன்னெடுப்புக்களும் கோரிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டாலும், கெளரவ ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களினதும், கெளரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினதும் நல்லாட்சி அரசின் உருவாக்கத்தின் பின்னரே இதற்கான முன்னெடுப்புக்கள் துரித்தப்படுத்தப்பட்டிருந்தன.

கடந்த வருடம் 04-04-2015ம் திகதி இதற்கான ஆரம்ப வேலைகள் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான கெளரவ அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், அவர்களின் பூரண வழிகாட்டலிலும் நிதியொதுக்கீட்டிலும் பல்வேறு தடைகள், இழுபறிகள், விமர்சனங்களுக்கு மத்தியிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இத்திட்டத்தை துரிதமாக முன்னெடுக்க வேண்டும். இப்பிரதேச மக்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமையினால் எதிர்நோக்கியிருக்கும் பாரிய உயிர் அச்சுறுத்தல் நோய்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும் நோக்கில் கல்குடா மஜ்லிஸ் ஷூராவும் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி அமைப்பாளருமான கணக்கறிஞர் HMM றியாழ் இரவு பகலாக அயராதுழைத்ததுடன், பல்வேறு முன்னெடுப்புகளை தலைவரின் வழிகாட்டலில் மேற்கொண்டிருந்தமை நன்றியுடன் நினைவுகூறப்பட வேண்டியதாகும்.

அத்துடன், இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு இப்பிரதேசம் முழுவதற்கும் சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுக்கப்படும். அதற்கான சகல ஏற்பாடுகளையும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான கெளரவ அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் பூரண வழிகாட்டலில் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினரும் முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி அமைப்பாளருமான கணக்கறிஞர் HMM றியாலினால் கல்குடா மஜ்லிஸ் ஷூராவுடன் இணைந்து முன்னெடுத்து வருவதும் குறுப்பிடத்தக்கது.

அதற்கான விசேட திட்டம் வகுக்கப்பட்டு, பூரணமாக இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கான நிதிகளை உலக நாடுகளின் உதவியுடன் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை தலைவர் மேற்கொண்டு வருவதுடன், அவ்வாறு நிதிகள் கிடைக்கப்பெறுமிடத்து, முழுப்பிரதேசமும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கான வழி வகைகள் செய்யப்படும் என கணக்கறிஞர் HMM றியாழ் தெரிவித்தார்.

சுத்தமான குடிநீர் வழங்கும் இத்திட்டத்தின் ஆரம்ப கட்டம் நிறைவுறுவதற்கு நிதியொதுக்கீடுகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான கெளரவ அல் ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கலுக்கு இப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, இதற்கு உதவிய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பணிப்பாளர்கள், அதிகாரிகள், முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி மத்திய குழு உறுப்பினர்கள், போராளிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக கணக்கறிஞர் HMM றியாழ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கல்குடா மஜ்லிஸ் ஷூராவின் தலைவர் மெளலவி ஹாமி சதக்கா, மெளலவி இஸ்மாயீல், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் KBS. ஹமீட், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித்திட்டமில் பணிப்பாளர் SA.றியாஸ், இளைஞர் சேவை அதிகாரி AM.ஹனீபா ஆகியோரும் உரையாற்றினார்கள்.

LEAVE A REPLY