(அப்துல் சலாம் யாசீம்)
திருகோணமலை-கன்தமலாவ பகுதியில் தேன் எடுக்கச் சென்ற நான்கு பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி இன்று (01) கோமரங்கடவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியவர்கள் அதே இடத்தைச்சேர்ந்த கே.ரத்ணவீர (42 வயது), எம்.ரத்ணாயக்க (40 வயது), எச்.முத்துபண்டா (51 வயது), ஆர்.ரண்பண்டா (48 வயது) எனவும் தெரிய வருகின்றது.
குறித்த நான்கு பேரும் அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு தேன் எடுக்கச்சென்று விழுந்து கிடந்த மரத்திற்குள் தேன் கூட்டை வெட்டிய போது அருகிலிருந்த மரத்தில் குளவி கூடு காணப்பட்டதை அவதானிக்காத நிலையில், தேன் காணப்பட்ட மரத்தை வெட்டியதினாலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குளவி கொட்டுக்கு இலக்காகிய நான்கு பேரையும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் வைத்திசாலை அதிகாரியொருவர் கூறினார்.