அட்டாளைச்சேனையில் நாளை மாபெரும் இரத்ததான முகாம்

0
191

bloodbag 0001(றிசாத் ஏ. காதர்)

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இயங்கிவரும் ஜம்இய்யதுத் தர்பிய்யத்தில் இஸ்லாமிய்யா அமைப்பினால் நாளை (02) ஞாயிற்றுக்கிழமை இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ் அமைப்பானது கடந்த பலவருடங்களாக இரத்ததான நிகழ்வினை இப்பிரதேசத்தில் சிறப்பாக நடாத்திவருகின்றது. அதன் தொடரில் இவ்வருடமும் அட்டாளைச்சேனை பிரதேசத்தினை மையப்படுத்தியதாக இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள இவ் இரத்ததான முகாமானது அமைப்பின் வளாகத்தில் அமையப்பெற்றுள்ள ஹன்ழலா பின் ஆமிர் ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் வழங்குவதற்காக முன்கூட்டியே பெயர்களை பதிவு செய்துள்ளதாக அமைப்பின் தலைவர் எம்.ஏ.முபீன் (ஸஹ்வி) தெரிவித்தார்.

மேலும், இரத்தானம் வழங்க ஆர்வமுள்ளோர் கீழ் வரும் தொலைபேசி இலக்கத்தின் (0778270730) ஊடாக தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றார்கள்.

LEAVE A REPLY