உலக சிறுவர் தினம் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா!

0
282

(ஜுனைட் எம்.பஹ்த்)

காத்தான்குடி FM MEDIA UNIT இனால் 01.10.2016 சனிக்கிழமை உலக சிறுவர் தினமாகிய இன்று “உலக சிறுவர் தினமும் சான்றிதழ் வழங்கும் விழாவும்” பி.ப 7.00 மணி தொடக்கம் 9:00 மணி வரை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அஷ்ஷஹீத் A அஹமது லெப்பை ஞாபகார்த்த மண்டத்தில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வு U.L.A. முபாறக் (SLPS-1) தலைமையில் இடம்பெறவுள்ளதுடன் பிரதம அதியாக A.C.அஹமட் அப்கர் (SLAS) உதவிப் பிரதேச செயலாளர் காத்தான்குடி, விஷேட அதிதியாக S.M.M.ஸாபி (B.com). செயலாளர் நகர சபை காத்தான்குடி, கெளரவ அதிதிகளாக M.A.C.M.பதுர்தீன் (Jp) பிரதேச கல்விப்பணிப்பாளர்-காத்தான்குடி மற்றும் கலாநிதி N.ஜெகதீசன் (JP) இயக்குனர் சபை FM MEDIA UNIT ஆகியோரும் பங்குகொள்ளவுள்ளனர்.

மேற்படி நிகழ்வில் 2016 ம் ஆண்டில் தரம் 05 மாணவர்களுக்காக FM MEDIA UNIT நடாத்திய புலமைப்பரிசில் கருத்தரங்கிலும், பரீட்சையிலும் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றார்கள்.

FM MEDIA UNIT
காத்தான்குடி.

LEAVE A REPLY