சிறுWar தினம்

0
261

sad-kid(Mohamed Nizous)

சிறிய பிள்ளைகளுக்காய்
சிறுவர் தினம் கொண்டாட்டம்
சிரிய பிள்ளைகளுக்கோ
சீவிப்பதே திண்டாட்டம்.

உரிய நேரப் பசி தீர்க்க
உணவின்றி சிறார் வாட
புரியாணிக் கடைகளிலே
போடுகிறார் சிறார் டிஷ்கவ்ண்ட்.

வாப்பாமார் வைபர் வாழ்த்தில்
மம்மிமார் மணிகிராம் அனுப்ப
சீப்பாகிச் சிதைவடையும்
சிறுவர் தின கொண்டாட்டம்.

ஆளுக்கு ஐநூறு ரூபா
அவசியம் தா கொண்டாட.
பாழாய்போன காசி இன்றி
பதறும் ஏழைச் சிறுவர்.

காத்திருந்த பெறுபேற்றில்
தோற்றுப் போனாய் எனும் றிஷல்ட்டை
ஆத்திரத்தை தூண்டி விட்டு
அறிவிப்பார் சிறுவர் தினத்தில்.

சிறுவரை துஷ்பிரயோகித்த
CCTV காட்சி இதோ
பொறுப்பற்ற லைக் விரும்பி
பொசுக்குவார் சிறார் வாழ்வை.

கொண்டாட்டம் தப்பில்லை
குதூகலமும் தப்பில்லை
என்றாலும் இதனை விட
இருக்கின்ற சிறுவர்களின்
துன்பத்தைப் போக்குவதே
தூய்மையான நன்மை தரும்.

LEAVE A REPLY