மாதம்­பை­ ­முஸ்லிம் குடும்­பங்­களின் காணி­களை அப­க­ரிக்க திட்டம்: எதிர்த்து மக்கள் ஆர்ப்­பாட்டம்

0
226

ஐந்து பரம்­ப­ரை­க­ளாக வாழ்ந்து வந்த காணியை பூஜா பூமி திட்­டத்தின் கீழ் சுவீ­க­ரிக்க முயற்சி செய்­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து நேற்றுக் காலை 9.30 மணி­முதல் முற்­பகல் 11 மணி­வரை கொழும்பு – சிலாபம் பிர­தான வீதியில் மாதம்பை தனி­வல்ல தேவா­லயம் முன்­பாக ஆர்ப்­பாட்டம் இடம்­பெற்­றது.

ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டோர் எதிர்ப்பு கோஷங்­களை எழுப்­பி­ய­துடன் எதிர்ப்பு வாச­கங்கள் எழு­தப்­பட்ட சுலோக அட்­டை­க­ளையும் ஏந்­தி­யி­ருந்­தனர்.

இது தொடர்­பாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட முக்­கி­யஸ்­தர்­களில் ஒரு­வ­ரான எஸ்.எம். ஹனீபா என்­பவர் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­த­தா­வது, ஐந்து பரம்­ப­ரை­க­ளாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்­க­ளுக்கு சொந்­த­மான காணியை தனி­வல்ல தேவா­ல­யத்தின் தர்­ம­கர்த்தா கீர்த்தி சேனா­நா­யக்கா என்­பவர் பூஜா பூமி திட்­டத்தின் கீழ் சுவீ­க­ரிக்கத் திட்டம் மேற்­கொண்டு செயற்­பட்டு வரு­கிறார்.

1991 ஆம் ஆண்டு முதல் இவர் இந்த திட்­டத்தை மேற்­கொண்­டுள்ளார்.

இந்த காணியில் 23 குடும்­பங்­க­ளுக்கு மேற்­பட்ட முஸ்­லிம்கள் பரம்­ப­ரை­ பரம்பரையாக வசித்து வருகின்றனர். இந்தக் காணிக்கான உறுதி எங்களிடம் உள்ளது. இதனை கைப்பற்ற இடமளிக்க முடியாது என்றார்.

Source: Vidivelli

LEAVE A REPLY