கட்­டா­ய­மாக பெண்கள் நிகாப் அணிய வேண்டும்; இதுவே இன்­றும் உலமா சபையின் நிலைப்­பா­டு

0
836

தடை வந்தால் முஸ்லிம் எம்.பி.க்கள் போராட வேண்­டும்: அ.இ.ஜ.உலமா தலைவர் ரிஸ்வி முப்தி தெரி­விப்­பு

rizvi-mufthi-acjuபெண்கள் நிகாப் அணி­வதை ஜம்­இய்­யதுல் உலமா வாஜிப் என்­ப­தாக கரு­து­கி­ற­து. கட்­டா­ய­மாக பெண்கள் நிகாப் அணிய வேண்டும் என 2007 இல் வெளியிட்ட பத்­வா­வின் அடிப்­ப­டை­யி­லா­ன நிலைப்­பாட்டிலே­யே அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா இன்னும் உள்­ளது என அதன் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி குறிப்­பிட்டார்.

அத்­துடன் நிகாபை தடை செய்­வ­தற்கு யாரேனும் முற்­பட்டால் அதற்­கெ­தி­ராக போராட வேண்­டி­யது பாரா­ளு­மன்­றத்தில் உள்ள 21 முஸ்லிம் எம்.பி.க்­க­ளி­னதும் ஏனைய சகல முஸ்­லிம்­க­ளி­னதும் கட­மை­யாகும் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

கடந்த 23.09.2016 வெள்ளிக்­கி­ழமை கொள்­ளுப்­பிட்டி ஜும்ஆ பள்­ளி­வா­சலில் நிகழ்த்­திய குத்பா பிர­சங்­கத்­தி­­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்­டார். அதில் அவர் மேலும் குறிப்­பி­டு­­கை­யில்,

உலகத்தில் பெண்கள் முகத்­திரை அணியும் விட­யத்தை ஒரு சர்ச்­சை­யான விய­ட­மாக மாற்றி விமர்­சித்துக் கொண்­டி­ருக்கும் கால கட்ட­த்தில் நாம் வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறோம்.

உல­கத்தில் குறிப்­பிட்ட சில நாடு­கள்தான் நிகாபை தடை செய்­தி­ருக்­கின்­றன. ஆனால் உலகின் பல நாடு­களில் இதனை வர­வேற்­கி­றார்கள். கண்­ணி­யப்­ப­டுத்­து­கி­றார்கள்.

நிகாப் அணியும் உரிமை வழங்­கப்­பட வேண்டும் என்று சொல்­கி­றார்­கள்.

இமாம் ஷாபியீ அவர்­க­ளுடைய கிரந்­தங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே இந்த நாட்டின் வக்பு சட்டம், முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் என்­பன இயற்­றப்­பட்­டுள்­ள­ன. ஜம்­இ­ய்­யதுல் உல­மாவும் தனது பத்­வாவை வழங்கும் போது தன்­னிச்­சை­யாக செயற்­ப­டு­வ­தில்லை. அதற்கும் ஒரு கோட்­பாடு இருக்­கி­றது. 1924 இலி­ருந்து உல­மாக்கள் பத்­வாக்­க­ளை ஷாபியீ மத்­ஹபின் அடிப்­ப­டை­யி­லேயே வழங்கி வரு­கி­றார்­கள்.
யுத்­தம் நடை­பெற்ற 30 வருட காலத்­திலும் இலங்­கையில் நிகாபை அணிந்த பெண்கள் இருக்­கி­றார்கள். நிகாப் அணியாத பெண்­களும் இருக்­கி­றார்கள்.

அந்த அடிப்­ப­­டையில் 2007 இல் ஜம்­இய்­யதுல் உலமா தனது பத்­வாவை வழங்­கி­யி­ருக்­கி­றது. அதற்­க­மைய பெண்கள் நிகாப் அணி­வதை ஜம்­இய்­யதுல் உலமா வாஜிப் என்­ப­தாக கரு­து­கி­ற­து. கட்­டா­ய­மாக பெண்கள் நிகாப் அணிய வேண்டும் என்ற அந்த நிலைப்­பாட்டையே ஜம்­இய்­யதுல் உலமா எடுக்­கி­றது.

இதை நான் பெப்­ர­வரி மாதம் 5 ஆம் திகதி சம்­மான்­கோட்டை பள்­ளி­வா­சலில் பிர­சங்கம் நிக­ழ்த்­தும்­போதும் மார்ச் மாதம் 11 ஆம் திகதியும் ஜூலை மாதத்தில் பேசி­யதும் இன்று பேசு­வதிலும் எந்­த­வி­த­மான மாற்­றுக் கருத்­தும் கிடை­யாது. இதில் நாம் மிகத் தெளிவாக இருக்­கிறோம். நிகாப் என்­பது வாஜி­­பா­னது. அது கட்­டா­ய­மா­னது.

இந்த நாட்டில் நிகாபை எதிர்க்கக் கூடி­ய­வர்கள் எவருமே இருக்­க­மாட்­டார்கள். பெண்கள் தமது மானத்தை கண்­ணி­யத்­­தை பாது­காக்க வேண்டும் என்­பதில் எல்­லோரும் ஒரு­மித்த கருத்­தி­லேயே இருக்­கி­றார்­கள். ஆனால் அதே­நே­ரத்தில் மாற்­றுக் கருத்­துள்­ள­வர்­க­ளையும் மதிக்க வேண்­டும் என்ற நிலைப்­பாட்டை ஜம்­இய்­யதுல் உலமா தன்னு­டைய ஒற்­று­மைப்­ பி­ர­க­ட­னத்­தில் வலி­யு­­றுத்­­தி­யி­ருக்­கி­ற­து.

2007 இல் நாம் ஷாபியீ மத்­ஹபின் அடிப்­ப­டையில் நிகாப் வாஜிப் எனும் பத்­வாவை வெளியிட்ட அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, 2009 இல் வெளியிட்ட ஒற்­றுமைப் பிர­க­ட­னத்­துக்கு அமை­வாக மாற்றக் கருத்­துக்­க­ளையும் மதித்து நடக்­கு­மாறு வலி­யு­றுத்­து­­­கி­ற­து.

எனினும் நிகாப் விட­யத்தில் 2007 இல் வெளியிட்ட பத்­வா­­­வு­டைய அதே நிலைப்­பாட்­டில்தான் இருக்­கி­றது என்­பதை வலி­யு­றுத்­து­கி­ற­து.
நிகாப் என்­பது இஸ்­லா­மிய அடை­யா­ள­மாக இன்று காட்­சி­ய­ளிக்­கி­றது.

இதற்கு எதி­ராக யாரேனும் சட்­டங்­களை கொண்டு வந்தால் முஸ்­லிம்கள் அதனை தன்­னு­டைய உரி­மை­யாக எடுத்து அதற்­காக போராட வேண்டும். எங்­க­ளுக்­கி­டையில் நிலவும் சண்டை சச்­ச­ர­வு­களை இன்­றோடு விட்­டு­விட வேண்டும் என்­ப­தற்­கா­க­த்தான் இரண்­டா­வது தட­வை­யா­கவும் இந்த விட­யத்­­தை குத்­பாவில் குறிப்­பி­டு­கிறேன்.

இந்த விட­யத்தை வட்ஸ் அப்­க­ளிலும் ஊடகங்­க­ளிலும் பேசுவதையும் இதை வைத்து ஒரு­வ­­ருக்­கொ­ருவர் மோதிக் கொள்­கின்ற நிலை ஏற்­ப­டு­வ­தை­யும் தவிர்த்­துக் கொள்ள வேண்டும்.

இந்த நாட்­டிலே அதா­னுக்கு ஏற்­பட்­டது போன்ற ஒரு சோக­மான நிலை­மையை ஏற்­ப­டுத்த வேண்டாம் என்ற எச்­ச­ரிக்­கை­­யையும் இந்த இடத்தில் உங்­க­ளுக்கு விடுக்க விரும்­பு­கிறேன் என்றும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி மேலும் குறிப்­பிட்­டார்.

Source: Vidivelli

LEAVE A REPLY