வெஜிடபுள் ஓட்ஸ் கஞ்சி

0
424

ஒட்ஸ் – அரை ௧ப்
பச்சை பட்டாணி – 5 மேசைக்கரண்டி
பீன்ஸ் – 5
காரட் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 5
தக்காளி – ஒன்று
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – சிறிது
மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி
சீரகத் தூள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு தேக்கரண்டி
மல்லித் தழை – 2 மேசைக்கரண்டி
தண்ணீர் – 2 கப்

காய்கறிகளை மிக சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.

குக்கரில் காய்கறி கலவை, ஒட்ஸ், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி போட்டு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சூப்பில் சேர்க்கவும். அதனுடன் மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு, மல்லித் தழை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

அடுப்பை அணைத்து சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

சுவையான வெஜிடபுள் ஓட்ஸ் கஞ்சி தயார். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை சூடாக பரிமாறவும்.

LEAVE A REPLY