இந்தியா- பாகிஸ்தான் அணுஆயுதங்களை பயன்படுத்தினால் 2.1 பேர் மரணம் 200 கோடி பேர் பாதிப்பு அதிர்ச்சி தகவல்

0
313

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி ராணுவம் முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 18ம் தேதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 19 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நேற்று முன்தினம் இரவு ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லைக்குள் 2-கி.மீ தொலைவு உள்ளே சென்று தாக்குதல்கள் நடத்தப்பட்டன.இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 55 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், பாகிஸ்தான் சிப்பாய்கள் 2 பேர் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய தரப்பில் தாக்குதல் தொடர்வதால் எல்லைப்பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து எல்லை பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் கிராமங்களில் இருந்து 15 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.பாகிஸ்தான் மீது அணு ஆயுதம் வீச வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி வலிறுத்து வருவது போல் பாகிஸ்தான் அரசு இந்தியா மீது அணு ஆயுதங்களை வீசி அழிக்க வேண்டும் என திட்டமிட்டு வருகிறது.

946c8c43-643b-4a26-b114-3b05930749ef_l_styvpfஇதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டால், இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட இழப்புகளை விட இரு நாடுகளுக்கு இடையே ஏற்படும் இழப்புகள் மிக மோசமாக இருக்கும் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவை விட 10 அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் அதிகம் உள்ளது. பாகிஸ்தானிடம் 120 அணு ஆயுதங்கள் உள்ளது.இது 2014 ஆம் ஆண்டு அணுஆயுத விவரங்கள் இதனை சிகாகோ பல்கலைகழக விஞ்ஞானிகள் வெளியிட்டு இருந்த இன்போகிராபிக் தகவலாகும்.

அந்த தகவலில் அமெரிக்க-ரஷ்யா ஆகியவை தலா 5 ஆயிரம் ஆயுதங்களும்,பிரான்ஸ் 300,சீனா -250,இங்கிலாந்து-225,இஸ்ரேல்-80 வைத்து உள்ளனர் என தகவல் வெளியிட்டு உள்ளது

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் ஒரே நேரத்தில் 2.1 கோடி மக்கள் உயிரிழக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்ற சூழலை தொடர்ந்து இருநாடுகளும் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும் என அமெரிக்காவில் உள்ள ருட்ஜர் கொளோரடா மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகங்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளன.

இந்த ஆய்வின் முடிவில் இரு நாடுகளும் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் இரு நாடுகளிலும் ஒரே நேரத்தில் 2.1 கோடி மக்கள் உயிரிழக்க நேரிடும் என தெரியவந்துள்ளது.

மேலும், பூமியை சுற்றியுள்ள ஓசோன் படலம் சுமார் 50 சதவிகிதம் பாதிப்பிற்கு உள்ளாகும் என்றும், இதனால் சுற்றுச்சூழல் மோசமாகி சுமார் 200 கோடி மக்கள் வறுமையில் மூழ்குவார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

–Daily Thanthi-

LEAVE A REPLY