அலி ஸாஹிர் மௌலானாவின் நிதி ஒதுக்கீட்டில் தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வு

0
128

கொளரவ பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின்  பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து ஏறாவூர் மம்ஃ மமஃ மாக்கான் மாக்கார் வித்தியாலய ஆராதணை மண்டபத்திற்கான தளபாடங்கள் கையளிக்கும் நிகழ்வும், மாணவர்த் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும் நேற்று 29.09.2016 வியாழக்கிழமை காலை 11.00மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.எம்.முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.ஆர்.சியாவுல் ஹக், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன், சமூக சேவைகள் நலன்புரி அமைச்சின் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.வஹாப்தீன், ஏறாவூர் நகர சபையின் செயலாளர், எம்.எச்.எம்.ஹமீம் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இந் நிகழ்விக் போது நாட்பது மாணவ மாணவியருக்கு சின்னம் சூட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY