தேசிய உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுப்பு

0
190

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

 ஒக்டோபர் மாதம் அனுஷ்டிக்கப்படும் தேசிய உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காத்தான்குடி நகர சபையின் செயலாளரும்,விஷேட ஆணையாளருமான எஸ்.எம்.எம்.ஸபி தெரிவித்தார்.

 மேற்படி விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் தேசிய உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு ஒக்டோபர் 1ம் திகதி நடமாடும் சேவைகளுடாக வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் காத்தான்குடி நகர சபையின் 12 வட்டாரங்களிலும் வீடு வீடாகச் சென்று நிலுலை வரி அறவிடல், சர்வதேச சிறுவர் தின,முதியோர் வார நிகழ்வுகளும், சிறுவர்களுக்கான சித்திரப்போட்டி, பாலர்பாடசாலை ஆசிரியர், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வூட்டல், ஒக்டோபர் 6ம் திகதி கழிவு முகாமைத்துவம் தொடர்பில் அதிபர், ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு,சந்தையில் குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக விழிப்பூட்டல், ஆசிரியர் தின நிகழ்வு ஒக்டோபர் 10ம் திகதி சுகாதார மற்றும் துப்பரவு வேலைத் திட்டத்தில் அலுவலக சுற்றாடலை துப்பரவு செய்தல்,  டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளும், விழிப்புணர்வுக் கருத்தரங்கும்,உளநல விழிப்பூட்டல்,இரத்ததான முகாம், ஒக்டோபர் 18ம் திகதி சுற்றாடல் மற்றும் மரநடுகை வேலைத்திட்டத்தில் பூமரங்கள் நடப்பட்டுள்ள பாதுகாப்புக் கூடுகளுக்கு வர்ணம் பூசுதல், குப்பைத் திடலில் மரநடுகை, ஏற்கனவே நடப்பட்டுள்ள மரங்களை பராமரித்தல் ஒக்டோபர் 20ம் திகதி பொது பயன்பாடு நிகழ்வுகளில் சமூக மட்ட அமைப்புக்களுடனான கலந்துரையாடல்,கடற்கரையில் பொது மக்களுக்கான குடிநீர் வசதி வழங்கல்,பொது மானங்கள் சிரமதானம்-முகைதீன் பள்ளி மையவாடி,சுற்று வட்டங்களை அழகுபடுத்தல், விளையாட்டு மைதானம் புனரமைப்பு, வீதி விளக்கு பொருத்துதல்,பொது மக்களின் பங்கேற்புடன் மணல் வீதிi கிரவல் வீதியாக மாற்றல், ஒக்டோபர் 27ம் திகதி விளையாட்டு நிகழ்வுகள் கிரிக்கட் சுற்றுப்போட்டி நடாத்தல், காற்பந்து வீரர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை போன்ற பல்வேறு தேசிய உள்ளுராட்சி வார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY