காத்தான்குடி பொது நூலகத்தின் ஏற்பாட்டில் “வாசிப்பின் ஊடாக நவீன சமூகத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்

0
198

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

 ஓக்டோபர் மாதம் அனுஷ்டிக்கப்படும் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையின் கீழ் இயங்கிவரும் காத்தான்குடி பொது நூலகத்தின் ஏற்பாட்டில் “வாசிப்பின் ஊடாக நவீன சமூகத்தை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் நாளை ஓக்டோபர் 1ம் திகதி தொடக்கம் ஓக்டோபர் 31ம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி நகர சபையின் செயலாளரும்,விஷேட ஆணையாளருமான எஸ்.எம்.எம்.ஸபி தெரிவித்தார்.

காத்தான்குடி பொது நூலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு காத்தான்குடி நகர சபையில் 29-09-2016 நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 மேற்படி விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ஓக்டோபர் 1ம் திகதி தொடக்கம் ஓக்டோபர் 31ம் திகதி வரை இடம்பெறவுள்ள தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் ஓக்டோபர் 1ம் திகதி தேசிய வாசிப்பு மாத ஆரம்ப வைபவமும்,முன்பள்ளி மாணவர்களுக்கான சித்திரப் போட்டியும், ஓக்டோபர் 3ம் திகதி பொது நூலக வாசகர் வட்டமும்,நூலக ஊழியர்கள் இணைந்து நடாத்தும் நூலக சிரமதானம், ஓக்டோபர் 6ம் திகதி பாடசாலை தரம்3 மாணவர்களுக்கான வாசிப்புப் போட்டி, ஓக்டோபர் 13ம் திகதி காலை நூலக தகவல்களை ஒழுங்குபடுத்தல் செயலமர்வு,மாலை உள்ளுர் எழுத்தாளர்,நூல் வெளியீட்டாளர்,கவிஞர்,கலைஞர்களுக்கான செயலமர்வு, ஓக்டோபர் 17ம் திகதி விழிப்புணர்வு ஊர்வலம், ஓக்டோபர் 18ம் திகதி பாடசாலை தரம்10 மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு என்பன இடம்பெறவுள்ளதாகவும் அத்தோடு தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளில் இறுதிநாள் நிகழ்வு ஓக்டோபர் 31ம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் இதில் நூலகத்திற்கான இணைய வசதி ஆரம்பம்,புத்தகக் கண்காட்சி, பாடசாலை மாணவர்களின் விவாத அரங்கு,எழுத்தாளர்கள் கௌரவிப்பு ,நூலக வாசகர், அங்கத்தவர் கௌரவிப்பு,சஞ்சிகை வெளியீடு,போட்டியாளர்களுக்கான பரிசளிப்பு,2015ம் ஆண்டு தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை சிறப்பாக நடாத்தி முடித்தமைக்கான தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் காத்தான்குடி பொது நூலகத்திற்கு வழங்கப்பட்ட விருதினை நூலகத்திற்கு கையளித்தல் போன்ற நிகழ்வுகள் மிகச் சிறப்பாக இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY