இண்டர்நெட் இல்லாமல் உங்கள் ஸ்மார்ட்போனில் ஜிபிஎஸ் பயன்படுத்துவது எப்படி..?

0
291

பெரும்பாலானோர்களை பொருத்தமட்டில் ஜிபிஎஸ் அம்சம் என்பது ஸ்மார்ட்போன்களில் மிகவும் மதிப்பிடப்படாத அம்சமாகும். ஆனால் உண்மை என்னவென்றால் நீங்கள் எங்காவது ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் சிக்கிக்கொள்ளும் போதுதான் ஜிபிஎஸ்-ன் தேவையை நீங்கள் உணர்ந்துக் கொள்வீர்கள்.

சரி, ஜிபிஎஸ் மிகவும் முக்கியமானது தான் என்று புரிந்துகொண்டால் மட்டும் போதுமா..? அதை பயன்படுத்தி நீங்கள் செல்ல விரும்பும் இலக்கை அடைய வேண்டும் அல்லவா.? சரி, அம்மாதிரியானதொரு கடினமான சூழ்நிலையில் ஜிபிஎஸ் பயன்படுத்த உங்களிடம் சரியான இன்டர்நெட் இல்லையெனில் என்ன செய்வீர்கள்.? சோர்ந்து போக வேண்டாம். இண்டர்நெட் இல்லாமல் உங்கள் ஸ்மார்ட்போனில் ஜிபிஎஸ் பயன்படுத்துவது எப்படி என்பதை பற்றிய தொகுப்பே இது..!

வழிமுறை #01
குறிப்பிட்ட இடத்தை நோக்கிய உங்கள் பயணத்திற்கு முன்பே நீங்கள் ஒரு விடயத்தை கட்டாயம் நிகழ்த்த வேண்டும் அது என்னெவெனில் குறிப்பிட்ட இடத்தின் ஆப்லைன் மேப் தனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் (இதை செய்ய உங்களிடம் நிச்சயமாக இண்டர்நெட் இருக்க வேண்டும்)

வழிமுறை #02
இரண்டாவதாக உங்களிடம் ஒருவேளை கூகுள் மேப்ஸ் ஆப் இல்லையெனில் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

வழிமுறை #03
பின்னர் கூகுள் மேப்ஸ் ஆப்பில் நீங்கள் விரும்பும் இடத்தின் தேடலை நிகழ்த்த வேண்டும்,அதாவது குறிப்பிட்ட இடத்தின் பெயரை கூகுள் மேப்ஸ் ஆப்பில் உள்ளிடவும்.

வழிமுறை #04
இடம் பெயரை பதிவு செய்த பின்னர், நீங்கள் பயணம் செய்ய உத்தேசித்துள்ள இடத்தை பற்றி தகவல்களை பார்பீர்கள் உடன் கீழே ஒரு பதிவிறக்க பொத்தானையும் காண்பீர்கள் அதை கிளிக் செய்து பதிவிறக்கம் நிகழ்த்திக்கொள்ளுங்கள்.

வழிமுறை #05
ஆஃப்லைன் மேப் பதிவிறக்கம் செய்யப்பட்ட பின்னர் நீங்கள் உங்கள் பயணத்தை ஆரம்பிக்க்கலாம், ஒருவேளை இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருந்தால் கூட கூகுள் மேப்ஸ் தன்னிச்சையாக குறிப்பிட்ட இடத்தை கண்டறிந்து ஆஃப்லைன் வரைபடங்கள் உதவியுடன் வழிகாட்டலை நிகழ்த்தும்.

LEAVE A REPLY