ரோட்டரி கழக கூட்டங்களில் கலந்துகொள்ள டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன் தமிழ்நாட்டுக்கு விஜயம்

0
140

(அப்துல்சலாம் யாசீம்-)

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் பொதுசன தொடர்பாளர் டாக்டர். ஈ. ஜீ. ஞானகுணாளன், , இந்தியாவில்லுள்ள தமிழ்நாட்டுக்கு வருகையின் போது 3 ரோட்டரி கிளப்புகளுக்கு விஜயம் செய்தார்.

முதல் அவர் மதுரை டவுன் தவ்வுன் (DOWN TOWN) ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்து, “ரோட்டரி திருகோணமலை” செயல்பாடுகள்” பற்றி உரை நிகழ்த்தினார்.

அவர் திருகோணமலை பகுதியின் தேவைகளை பற்றி விளக்கினார் மற்றும் போரின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அவர்களை கேட்டுக் கொண்டார். அதன் பிறகு அவர் ரோட்டரி கிளப் திண்டுக்கல் மேற்கு மற்றும் சென்னை அண்ணாநகர் ஆதித்தியா (Anna Nagar Aathithiya) ரோட்டரி கிளப்களுக்கு விஜயம் செய்து, “ரோட்டரி திருகோணமலை” செயல்பாடுகள்” பற்றி உரை நிகழ்த்தினார்.

அவர் உரை நிகழ்த்திய இந்த மூன்று ரோட்டரி கழகங்களிலும், அவரது உரையை கவனமாக கேட்டத்துடன் அவர்கள் தங்களால் முடிந்த உதவி செய்வதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள்.

LEAVE A REPLY