சட்டவிரோதமாக கட்டப்பட்டவை என்ற போர்வையில் மியன்மாரில் பள்ளிவாயல்களையும், மதரஸாக்களையும் இடித்துத் தள்ள முஸ்தீபு

0
354

(எம்.ஐ.அப்துல் நஸார்)

2f748d8a-8a68-478b-89ee-9f538d033420_w987_r1_sமியன்மாரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மொங்டௌ மற்றும் புதிடொங் ஆகிய நகரங்களிலுள்ள பள்ளிவாயல்கள் மதரஸாக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டடங்களை இடிப்பதற்கு மியன்மாரின் ரக்ஹினி மாநில அரசாங்க உயரதிகாரிகள் குழு திட்டமிட்டுள்ளது.

‘சட்டத்திற்கமைவாக அனுமதி பெறப்படாது கட்டப்பட்டுள்ள பள்ளிவாயல்கள் மற்றும் ஏனைய கட்டடங்கள் தொடர்பில் மதிப்பீட்டினைச் செய்துவருகின்றோம்’ என ரக்ஹினி மாநில எல்லைப் பாதுகாப்பு விவகார அமைச்சர் கேணல் டியின் லின் கடந்த புதன் கிழமை உள்ளூர் ஊடகமொன்றிற்குத் தெரிவித்தார்.

வொய்ஸ் ஒப் அமெரிக்கா பர்மிய வானொலி சேவைக்கு அமைச்சரின் அலுவலக அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில் ஆங் சான் சுய்குயி தலைமையிலேயே இவ்வாறான சட்டவிரோத கட்டங்கள் அகற்றப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

ஓன்பது பள்ளிவாயல்கள் மற்றும் 24 மதரஸாக்கள் உள்ளிட்ட 2,270 சட்டவிரேதக் கட்டடங்கள் மொக்டௌவில் காணப்படும் அதேவேளை புதிடொஙகில் மூன்று பள்ளிவாயல்கள் மற்றும் 11 மதரஸாக்கள் உள்ளிட்ட 1,056 சட்டவிரேதக் கட்டடங்களும் காணப்படுவதாக அதிகாரியொருவார் தெரிவித்தார்.

மியன்மாரின் மிகவும் வறுமையான மாநிலமான ரக்ஹினியில் சுமார் 125,000 ரொஹிங்கிய முஸ்லிம்கள் வாழ்கின்றனர். 2012ஆம் ஆண்டு பொத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து இவர்களுள் பெரும்பான்மையினர் தற்காலிக முகாம்களுக்குள் தம்மை முடக்கிக் கொண்டுள்ளனர்.

பங்களாதேஷிலிருந்து புலம் பெயர்ந்து சட்டவிரோதமாக மியன்மாரில் பல தலைமுறைகளாக அவர்கள் வாழ்வதாக பெரும்பான்iயினரான பௌத்தர்கள் நம்புகின்றனர். 2011 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த இராணுவ அரசாங்கம் முஸ்லிம்களுக்கு பிரச்சாரங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் கடிவாளமிடத் தவறிவிட்டது.

மியன்மார் என அழைக்கப்படும் பர்மாவில் முதன் முறையாக இராணுவ அரசாங்கம் பதவிக்கு வந்த வேளையில் 1962ஆம் ஆண்டு அந்தப் பிராந்தியத்தில் பள்ளிவாயல்கள் மற்றும் மதரஸாக்களை அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

நீண்டகாலத்திற்கு முன்னர் மதரீதியான கட்டுமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை திடீரென நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதன் பின்னணி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஆங் சான் சுய்குயின் அமெரிக்க விஜயத்தின்போது ‘குறிப்பிடத்தக்க சமூக, அரசியல் மாற்றங்களினை கருத்திற்கொண்டு’ தென்கிழக்காசிய நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையினை நீக்குவதாக பராக் ஒபாமா உறுதியளித்தார்.

எனினும், பொருளாதாரத் தடையினை நீக்குவதென்ற பராக் ஒபாமாவின் தீர்மானம் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் நீண்டகாலமாக ரோஹிங்கிய மக்களுக்கு நடக்கின்ற அநீதிகள் தொடர்பில் அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

நோபல் பரிசை வென்றவரும் தற்போதைய மியன்மாரின் தலைமைத்துவப் பொறுப்பில் இருப்பவருமான சுய்குயி கடந்த புதன் கிழமை ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றுகையில், மேற்கு மாநிலத்தில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

எனினும், ரோஹிங்கியா என்ற வார்த்ததையினை பயன்படுத்துவதனை மிகக் கவனமாகத் தவித்துக் கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் பதவிக்கு வந்த அவரது அரசாங்கம் பதற்றத்தைத் தணிக்குமாறும், வன்முறைகளுக்கு இலக்காகிக் கொண்டிருக்கின்ற நாடற்றோர் பிரச்சினையினை தீர்வு காணுமாறும் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டு வருகின்றது.

‘சர்வதேச விசாரணைகளுக்கு நாம் பயப்படவில்லை’ என ஐ.நா சபையில் தெரிவித்த சுயி குயி ‘மாநிலத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களையும் சமாதானம், ஸ்திரத்தன்மை, அபிவிருத்தி நோக்கி இட்டுச் செல்வதற்கான நிலைத்து நிற்கக் கூடிய தீர்வினைக் காண்பதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம்’ எனவும் தெரிவித்தார்.

‘பள்ளிவாயல்களையும், மதரஸாக்களையும் இடித்து அகற்றுவதென்ற இந்தத் தீர்மானம் தொடர்பில் உள்ளூர் முஸ்லிம்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர், இது சம்பந்தமாக மியன்மார் உயரதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர்’ என முன்னாள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் கொபி அனானின் தலைமையில் அமைக்கப்பட்ட ரோஹிங்கிய பிணக்கு தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினரும் முஸ்லிம் சமூகத் தலைவருமான யூ எயி ல்வின், வொயிஸ் ஒப் அமெரிக்கா வானொலிக்கு தெரிவித்தார்.

‘முஸ்லிம் சமயத் தலைவர்கள் சமய விவகார யூனியன் அமைச்சரை சந்திப்பதற்கு முயன்று வருகின்றார்கள், சட்டத்தின் படி மதச்சுதந்திரம் இருக்கின்றது. எனவே சமயத் தலங்கள் அதே இடங்களில் இருக்க வேண்டும். அது மட்டுமல்ல புனர் நிர்மாணம் செய்யப்படவும் வேண்டும்’ எனவும் அவர் தெரிவித்தார்.

‘இவ்வாறு சமயக் கட்டுமானங்களை இடித்து தள்ளுவதற்கான இந்தத் திட்டம் குடியிருப்பாளர்கள் மத்தியில் கவலையினை ஏற்படுத்தும் அதுமட்டுமல்லாது முஸ்லிம் தலைவர்கள் கூட இந்தச் செயற்பாடு மேற்கு மாநிலத்திலுள்ள பௌத்தர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கிடையே வீணான பதற்றத்தை உருவாக்கும் என குறிப்பிட்டுள்ளனர்’ என பர்மாவின் ஜனநாயகக் குரல் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ரக்ஹினி மாநிலம் கட்டடங்களை இடித்தகற்கும் பணிகளில் ஈடுபடுமானால், அது வரம்புமீறிய செயற்பாடாகக் கருதப்படும்’ என ஆங் சாங் சுயி குயி இன் ஆளும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் பேச்சாளர் ஒருவர் கடுந் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘இவ்வாறான செயற்பாடுகள் தற்போது அமுலில் உள்ள சட்டங்களுக்கு முரணானவையாகும், பள்ளிவாயல்களை இடிப்பதற்கு அவர்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை’ என ஜனநாயகத்திற்கான தேசிய லீக்கின் மத்திய குழு உறுப்பினர் வின் டெயின் தெரிவித்தார்.

இதனிடையே, 11 ரோஹிங்கிய அமைப்புக்கள் இணைந்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக ரக்ஹினி மாநில அரசாங்கத்தினால் கூறப்படும் பள்ளிவாயல்களையும், மதரஸாக்களையும், ரோஹிங்கிய மக்களின் வீடுகளையும் இடிக்க வேண்டாம் என அந்த மாநில அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

‘சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதென்ற போர்வையில் மொங்;டௌ மற்றும் புதிடொங் ஆகிய நகரங்களிலுள்ள 12 பள்ளிவாயல்கள், 35 மதரஸாக்கள் உள்ளிட்ட 3000 இற்கும் மேற்பட்ட றொஹிங்கிய கட்டடங்களை இடிப்பதற்கு ரக்ஹினி மாநில அரசாங்கம் திட்மிட்டிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக’ அந்த அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதக் கட்டடங்களை இடித்தகற்றுவது என்ற அறிவித்தல் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து றோஹிங்கிய சமூக மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதோடு, இந்தத் திட்டம் பாதுகாப்பற்ற நிலையிலுள்ள றோஹிங்கிய மக்களை இனச்சுத்திகரிப்புச் செய்யும் நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

‘இந்தத் திட்டம் ரக்ஹினி பிராந்தியத்தில் சமாதானத்தையும் ஸ்திரத் தன்மையையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை சீர்குலைத்து ஸ்திரத் தன்மையை இல்லாமலாக்குவதற்கு அரக்கான் (ரக்ஹினி) மாநில அரசாங்கம் மற்றும் ரக்ஹினி கடும்போக்குவாத பௌத்த தலைவர்களின் கூட்டுச் சதியாகும்.

அது மட்டுமல்லாது உள்ளக ரீதியாக அதிகமான றோஹிங்கிய மக்களை இடம்பெயர வைத்து மொங்டௌ மாவட்டத்தில் அனைவரையும் ஒரே இடத்தில் குவியச் செய்து வதை முகாம்களையொத்த முகாம்களை உருவாக்குவது அவர்களது நோக்கமாகும்’ என 11 ரோஹிங்கிய அமைப்புக்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மியன்மார் அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு இந்த நடவடிக்கைகள் முரண்பட்டதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக முஸ்லிம்கள் தொடர்பான எதிர்ப்புணர்வு பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகளில் தீவிரமாகப் பரப்பப்படுவதோடு, வன்முறைகளும் வெடித்துள்ளன. இன மேதல்கள் முக்கிய நகரங்களில் இடம்பெற்றுள்ளன. பௌத்த தேசியவாதக் குழுக்கள் இதன் பின்னணியில் இருந்துள்ளன.

இரு சமூககங்களுக்கும் இடையேயான பதற்ற நிலை தற்போது மிகவும் கூர்மையடைந்துள்ளதால் சிறிய முறுகல் நிலையும் பாரிய இன மோதலாக மாற்றமடையும் நிலை இங்கு காணப்படுகின்றது.

கடந்த ஜுன் மாதம் மத்திய பர்மாவில் கட்டப்படும் முஸ்லிம் பாடசாலையொன்று தொடர்பாக அயலவர்களிடையே ஏற்பட்ட முறுகல் நிலை, காடையர் குழுவொன்றினால் பள்ளிவாயலொன்று தீக்கிரையாக்கப்பட்டு, டசின் கணக்கான முஸ்லிம்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு தப்பி ஓட வேண்டிய நிலைக்கும் கொண்டு சென்றது.

இந்த நம்பவம் நடைபெற்று ஒரு வாரத்திற்குள்ளாக நாட்டின் வடக்கேயுள்ள முஸ்லிம்களின் தொழுகை அறையொன்று தீக்கிரையாக்கப்பட்டது. இந்த சம்பவத்துடன் 500 போர் சம்பந்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், ஐந்து பேர் மாத்திரமே கைது செய்யப்பட்டனர்.

இவ்வாரம், தென் கிழக்கு மியன்மாரில் ஏற்பட்ட மோதல்களின் காரணமாக குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஆயிரக் கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளதாகவும் வயர் நியூஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமாதான முயற்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தை எல்லையாகக் கொண்ட காரீன் மாநிலத்தில் அரசாங்கப் படையினருக்கும் DKBA என அறியப்பட்ட கிளர்ச்சிக் குழு ஒன்றுக்கும் இடையே இம் மாதம் மோதல் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்தது.

mosque-in-rakhine

A Rohingya Muslim student stands at a window of a local mosque as he memorizes the Koran, near Sittwe April 29, 2013. Myanmar authorities have begun segregating minority Muslims from the Buddhist majority in troubled areas of a country in transition.  Picture taken April 29, 2013. To match Special Report MYANMAR-ROHINGYA/REUTERS/Damir Sagolj (MYANMAR - Tags: CONFLICT RELIGION POLITICS) - RTXZMOK

LEAVE A REPLY