வரட்சியினால் நீர்த்தட்டுப்பாடு : ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகங்கள் காலவரையின்றி மூடப்பட்டன

0
182

வரட்சி கார­ண­மாக ஏற்­பட்­டுள்ள நீர் தட்­டுப்­பாட்­டை­ய­டுத்து ரஜ­ரட்ட பல்­க­லையின் மிஹிந்­தலை வளா­கத்தின் மூன்று பீடங்கள் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சமூ­க­வியல் மற்றும் மானு­ட­வியல், பிர­யோக விஞ்­ஞான பீடம், முகா­மைத்­துவ பீடங்­களே தற்­கா­லி­க­மாகயின்றி மூடப்­பட்­டுள்­ள­தாக பல்­க­லைக்­க­ழக நிர் வாகம் தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் நிலவி வரும் வரட்­சி­யான கால­நி­லையின் நீர்த்­தேக்­கங்­களின் நீர்­மட்டம் வேக­மாக வீழ்ச்­சி­ய­டைந்து வரு­வ­தாக நீர்ப்­பா­சன திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

அநே­க­மான நீர்த்­தேக்­கங்­களின் நீர்­மட்டம் 35 சத வீதம் வரை குறைந்­துள்­ள­தாக நீர்ப்­பா­சன திணைக்­க­ளத்தின் நீர்­வள முகா­மை­யாளர் மோஹ­ன­ராஜா தெரி­வித்­துள்ளார்.

அநு­ரா­த­புரம் மற்றும் குரு­ணாகல் ஆகிய மாவட்­டங்­களில் உள்ள நீர்ப்­பா­சன திணைக்­க­ளத்­துக்கு உரித்­தான சிறிய மற்றும் நடுத்­த­ர­ள­வி­லான நீர்த்­தேக்­கங்கள் பல­வற்றின் நீர்­மட்டம் குறை­வ­டைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்காரணமாக குறித்த பிரதேசங்களில் வசித்துவரும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிய வந்துள்ளது.
-Metro News-

LEAVE A REPLY