புல்மோட்டையில் மீன் பிடிக்கச்சென்ற இரு மீனவக்குழுக்கழுக்கிடையே மோதல் : லாபீர் மற்றும் சரித் காயம்

0
160

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை. புல்மோட்டை கடற்பரப்பில் மீன் பிடிக்கச்சென்ற இரு மீனவக்குழுக்கழுக்கிடையே மோதலில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்றிரவு (29) அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்பரப்பில்இரண்டு குழுக்களுக்கிடையே நிலவிய வாக்குவாதம் கைகலப்பாக மாறியதினால் இரு பகுதிகளைச்சேர்ந்த மீனவர்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தவர்கள் புல்மோட்டை-ரஹுமானிய்யா நகரைச்சேர்ந்த அச்சுல் அக்பர் லாபீர் (37 வயது) மற்றும் ஜே.ஏ.சரித் இஸங்க 937 வயது) ஆகிய இருவருமே காயமடைந்தவர்கள் எனவும் புல்மோட்டை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY