மன்னர் ஆட்சிகளை பாதுகாக்க நடத்தவேண்டிய மானங்கெட்ட பிழைப்பு

0
273

(முஹம்மது ராஜி)

மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகி போய் விட்டது இப்போது சவூதி அரேபியாவுக்கு …

கூட்டணி .. கூட்டாளி.. பாட்டாளி.. பங்காளி .. என்றெல்லாம் பல பரம்பரைகளாக அழைக்கப்பட்ட அமெரிக்காவுடனான உறவுக்கு சங்கு ஊதப்பட்டு விட்டது .

யாரோ செய்த வேலைக்கு யாருக்கோ ஆப்பு வைக்கப்படுவது போல 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 இல் இடம்பெற்ற தாக்குதலால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள் சவூதி அரேபியா மீது வழக்கு தொடரலாம் என்கிற சட்டம் அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட வேளை , ஒபாமா வீட்டோ பாவித்து தடுத்து நிறுத்தினார் .

இப்போது ஒபாமாவுக்கே நெத்தியடி கொடுக்கப்பட்டுள்ளது . ஒபாமாவின் வீட்டோவுக்கு எதிராக செனட் சபை யில் 97-1 வாக்குகள் என்ற ரீதியிலும் காங்கிரஸில் 348-77 வாக்குகள் என்ற அதீத பெரும்பான்மையாலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .இவ்வாறான பெரும்பான்மை நிறைவேற்றம் சட்டமாக அங்கு கருதப்படுகிறது .

ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கி கொண்டுள்ள ஒவ்வொரு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அடிக்கப்பட்டுள்ள சாவுமணி இது .

ஒசாமா பின் லாடனே செய்ததாக கூட நிரூபிக்கப்படாமல் உள்ள செப்டம்பர் 11 க்கும், தானும் தன்னுடைய பாடும் என்று இருந்த சவூதி அரேபியாவுக்கும் என்ன சம்பந்தம் ? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக இல்லையா ?

சொல்லப்பட்ட ஒரு பொய்யை நிரூபிக்க காலத்துக்கு காலம் சொல்லப்படும் பொய்களில் இதுவும் ஒன்று ..

ஈராக்கில் உள்ள ஒவ்வொரு குடி மகனும் அமெரிக்கா மீது இவ்வாறு வழக்கு தொடர்ந்தால் அமெரிக்கா பிச்சைக்கார நாடாக போய் விடும்

செப்டம்பர் 11 போன்று பல சம்பவங்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்பட்டு இளித்த வாய் கொண்ட அரபு நாடுகள் மீது வழக்குகள் போடப்பட்டு நஷ்ட ஈடுகள் தொடுக்கப்படலாம் .

காபிர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ளாதீர்கள் என்று அல்லாஹு த ஆ லா புனித குர் ஆர்னின் கூறியது பொய்யாகி விடுமா என்ன ?

மன்னர் ஆசனங்களை பாதுகாப்பதற்கு எத்தனை மானங்கெட்ட பிழைப்புகளுக்கு விலை கொடுக்க வேண்டியுள்ளது ?

உண்ட சோற்றுக்கும் ஊட்டப்பட்ட பருப்புக்கும் ஏவரை விட்டுத்தானே ஆக வேண்டும்.. ?

LEAVE A REPLY