திருகோணமலை: வட்டார எல்லையில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் பாதிப்பு

0
139

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டதில் மூதூர், கிண்ணியா, தோப்பூர், கன்தளாய், முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம், குச்சவௌி ஆகிய பகுதிகளில் புதிய வட்டார பிரிவில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா மஜ்லிஸ் ஸூராவின் பொதுச்செயலாளர எம்.எஸ்.எம்.நியாஸ் தெரிவித்தார்.

மாவட்டத்தில் வட்டார எல்லைப்பிரிவில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டுள்ளமையினால் அதற்கான தீர்வினை பெற்றுக்கொள்வது தொடர்பாக நேற்று (29) உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சில் திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் கிண்ணியா மஜ்லிஸ் ஸூரா சபையின் பிரதிநிதிகளும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்குமிடையில் கலந்துரையாடல் இடம் பெற்றது.

புதிய வட்டாரபிரிவில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அமைச்சர் பைஸல் முஸ்தபாவிடம் ஆதார பூர்வமான சான்றுகளை அமைச்சரிடம் கையளித்ததோடு தீர்க்கமான முடிவினை பெற்றுத்தருமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

இக்கலந்துரையாடலில் சிறுபான்மையினர் வட்டார எல்லைப்பிரிவில் எவ்வாறு பாதிக்கப்டுள்ளார்கள் தொடர்பாக கலந்துறையாடும் போது பெரும்பான்மையினரைக்கொண்ட கோமரங்கடவெல பிரதேச சபைக்கு 5831 வாக்காளர்களுக்கு 13 பிரதிநிதிகளும் 21069 வாக்காளர்களைக்கொண்ட கிண்ணியா நகர சபைக்கு 10 பிரதிநிதிகளும் வழங்கப்பட்டுள்ளனர்.

இதன்படி கோமரங்கடவெலவுக்கு 450 வாக்காளர்களுக்கு 01 பிரதிநிதியும் கிண்ணியா சகர சபைக்கு 2100 வாக்காளர்களுக்கு ஒரு பிரதிநிதியும் என பிரதிநிதித்துவம் ஒதுக்கப்பட்டு பாரபட்ஷம் காட்டப்பட்டுள்ளதாகவும் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

இப்பிரச்சனை தொடர்பாக அமைச்சரவை உப குழுவில் சமர்ப்பித்து தீர்க்கமான தீர்வொன்றினை பெற்றுத்தருவதாகவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா வாக்குறுதியளித்ததாகவும் கிண்ணியா ஸூரா மஜ்லிஸ் சபையின் பொதுச்செயலாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY