பைசால் காசீமின் முயற்சியால் கொரிய நாட்டின் COLON மருத்துவ அணி இலவச சிகிச்சை

0
165

(அஷ்ரப் ஏ சமத்)

சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீமின் முயற்சியால் கொரிய நாட்டின் COLON மருத்துவ அணியினை கல்முனை அழைத்து வந்து கல்முனை வடக்கு வைத்தியசாலையில் இலவச சிகிச்சை முகாம் இன்று (28)ஆம் திகதி ந டைபெற்றது.

இந் நிகழ்வு சுகாதார பிரதி அமைச்சரின் இணைப்பு செயலாளர் எம். ரீ. சப்றாஸ் தலைமையில் நடைபெற்றது. இச் சிகிச்சை முகாமில் இலவச கண் கண்புரை, தோல் அறுவை சிகிச்சை முகாம்கள் நடைபெற்றன. இந் சிகிச்சையில் கல்முனை, பான்டிருப்பு. நீலாவனை, மருதமுனை பிரதேச நோயாளிகள் மருத்துவ சிகிச்சை பெற்று சுகமடைந்தனா்.

இவ் அறுவை சிகிச்சை முகாமுக்கு 150 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் கலந்துகொண்டதுடன். இவ் வைத்திய முகாம் தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு (28,29,30) கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்னால் அம்பாறை பிரதேசங்களில் உள்ள பல சுகாதார மருத்துவ காரியாலயங்களின் ஊடாக இவ் நோயாளர்களை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்

LEAVE A REPLY