வங்காளதேச அணியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் பிடித்த சுழற்பந்து வீச்சாளர்

0
238

வங்காளதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வங்காள தேசம் கடும் போராட்டத்திற்குப் பின் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆனால், 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அபாரமாக விளையாடி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரை 1-1 என சமநிலைப் படுத்தியுள்ளது. வரும் 1-ந்தேதி மிர்புரில் நடக்கும் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றிவிடும். இது வங்காள தேச அணிக்கு பெரிய பின்னடைவாகும்.

இதனால் அந்த அணி பந்து வீச்சை மேலும் வலுப்படுத்தும் நிலையில் இடது கை சுழற்பந்து வீச்சாளரான மொஷரப் ஹொசைனை 8 வருடங்களுக்குப் பிறகு அழைத்துள்ளது.

இடது கை சுழற்பந்து வீச்சாளரான மொஷரப் ஹொசைன் கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் வங்காளதேச அணிக்காக 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். அதன்பின் பி.சி.சி.ஐ. சம்மதம் இல்லாமல் தொடங்கப்பட்ட ‘இந்தியன் கிரிக்கெட் லீக்’ தொடரில் கலந்து கொண்டார். இதனால் அவருக்கு 2010-ம் ஆண்டுவரை கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பிடித்திருந்தார். ஆனால், ஆடும் லெவனில் இடம்கிடைக்கவில்லை.

2013-ம் ஆண்டு நடைபெற்ற வங்காளதேசம் பிரிமீயர் லீக் தொடரின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தடைசெய்யப்பட்டார். பின்னர் நடைபெற்ற விசாரணையில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் தடை நீக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டாக்கா பிரிமீயர் லீக் தொடரில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ஒரு போட்டியில் விளையாட தடை பெற்றார். தற்போது உள்ளூர் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் வங்காளதேச அணியில் இடம்பிடித்துள்ளார்.

-Malai Malar-

LEAVE A REPLY